புதுச்சேரி
தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதேபோல புதுச்சேரியிலும் அனைத்து வகையான பாலுக்கும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 வீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த விலை உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று தெரிவித்தா
அதன்படி, புதுச்சேரி பாண்லே பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பால் 42 ரூபாயில் இருந்து 48 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பால் கொள்முதல் விலையும் 6 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொள்முதல் விலையானது, 30 ரூபாயில் இருந்து 36 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.