பிகில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி இந்த படம் தீபாவளி அன்று வெளியாவது உறுதி என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். தளபதியின் இடத்தை தீபாவளி அன்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ரசிக்க தயாராகுங்கள் என்றும் ‘ தி வெயிட் இஸ் ஓவர்’ என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பிகில், கைதி மற்றும் சங்கத்தமிழன் ஆகிய மூன்று திரைப்படங்கள் தீபாவளி அன்று வெளியாவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அர்ச்சனா கல்பாதி அட்டகாசமான ‘பிகில்’ திரைப்படத்தின் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். விஜய், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்பட பலர் இருக்கும் இந்த புகைப்படம் பெருமளவில் வரவேற்பை பெற்று வருகிறது