Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

செட்டிநாடு கோழிஉப்புக்கறி செய்முறை

Posted on August 29, 2019 By admin No Comments on செட்டிநாடு கோழிஉப்புக்கறி செய்முறை

கோழிக்கறி – 1/2 கிலோ,
வரமிளகாய் – 10,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்,
மல்லித்தூள் -1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
இஞ்சி – சிறிது,
பூண்டு – 5 பல்,
சின்ன வெங்காயம் – 10,
கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை

முதலில் கறியை சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமாக கழுவவும். கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி வைக்கவும். வரமிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து வரமிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் விதைகள் பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கோழிக்கறியை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு உடன் தக்காளி சேர்த்து வதக்கவும். வரமிளகாய், தக்காளி இரண்டும் தன் தோல் தளிந்து வரும்வரை மிதமான தீயில் வதக்க வேண்டும். அதுவே இந்தக் கறியின் தனிச்சிறப்பு. மிளகாய்த்தூள், மல்லித்தூள் ஒரு கோப்பைத் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து தீயை மென்மையாக வேக விடவும். பிறகு நீர் வற்றி வரும் வரை வறுத்து மேலே சிறிது கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

Genaral News Tags:உப்புக்கறி, செட்டிநாடு கோழிஉப்புக்கறி செய்முறை

Post navigation

Previous Post: தமிழகத்தில் மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது
Next Post: சிக்சர் பட தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ்

Related Posts

திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு  Genaral News
சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது என்பதே சஞ்ஜீவன் – இயக்குனர் மணி சேகர் Genaral News
Filmmaker Shakti Soundar Rajan on ‘Captain’ Filmmaker Shakti Soundar Rajan on ‘Captain’ Genaral News
Murugan_Idli_shop_www.indiastarsnow.com முருகன் இட்லிக் கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் !! Genaral News
Psycho dedicates to the Visually Challenged - At the Mirchi Music Awards 2021* Psycho dedicates to the Visually Challenged – At the Mirchi Music Awards 2021 Genaral News
கலாம்  சலாம் - மெய்நிகர் அஞ்சலி-indastarsnow.com கலாம்  சலாம் – மெய்நிகர் அஞ்சலி Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme