அகமதாபாத்தில் உள்ள டபுள் ட்ரீ ஹில்டன் என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறேன். ரூம் சர்வீஸ் மூலம் உணவு ஆர்டர் செய்தபோது அதில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.என்று அவர் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
தமிழில் அன்பே ஆருயிரே, மருதமலை, ஜாம்பவான், லீ, உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் மீரா சோப்ரா. தமிழ் படங்கள் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை என்றாலும் இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். இந்நிலையில், மீரா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் நெளிவதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார்.