காந்திநகர்,
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில், ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு பேசுகையில், ‘21-ம் நூற்றாண்டின் இரும்பு மனிதர் உள்துறை மந்திரி அமித்ஷா. அவரது திறமையை கண்டு நான் வியந்துள்ளேன். எழுச்சிமிக்க தலைவரை பெற்றதற்காக குஜராத்தும், இந்தியாவும் பெருமை கொள்கிறது’ என்று தெரிவித்தார். விழாவில் அமித்ஷாவும் கலந்து கொண்டார்.