சென்னையில் நடந்த யுனிசெப் கூட்டத்தில் நடிகை திரிஷா கலந்து கொண்டார். நடிகை திரிஷா கூறியதாவது:-
பெண்கள், குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம். இணையதள குற்றங்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாப்போம். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை பிறரால் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையில் போக்சோ சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2014-ம் ஆண்டு 9 ஆயிரமாக இருந்த குழந்தைகளுக்கு எதிராக இருந்த பாலியல் வழக்குகள் 2016-ல் 36 ஆயிரமாக அதிகரித்துவிட்டது. பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள். இளைஞர்கள் இதுகுறித்து பேசவும், செயல்படவும் முன்வரவேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான குற்றங்கள் அதிகரித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சமூக வலைதளங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தானவை.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு வலுவான சட்டம் தேவை. குழந்தைகளுக்கான உரிமை பற்றி கூடுதல் விழிப்புணர்வு வேண்டும். கிராமப்புற பெண்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர்.
திரைப்படங்களை சீரியசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சினிமா என்பது கற்பனையே; அதை பின்பற்றக்கூடாது.