Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனே

Posted on August 28, 2019 By admin No Comments on சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனே

பி.வி. சிந்துவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை அருந்ததி, ஒஸ்தி, தேவி ஆகிய தமிழ் படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனு சூட் தயாரிக்கிறார். பி.வி. சிந்துவின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் பேட்மிண்டன் வீரர் கோபிசந்த் கதாபாத்திரத்திலும் அவர் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு ‘சிந்து’ என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேசி வருகிறார்கள். அவர் சம்மதிப்பார் என்று தெரிகிறது. இந்த படத்துக்கான திரைக்கதையை ஏற்கனவே தயார் செய்து விட்டனர். இப்போது பி.வி சிந்து உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதால் கிளைமாக்சை மாற்றுகின்றனர்.

இதுகுறித்து சோனுசூட் கூறும்போது, “சிந்துவின் வாழ்க்கை கதையின் திரைக்கதை வசனத்தை ஏற்கனவே எழுதி முடித்து விட்டோம். இப்போது உலக சாம்பியன் பட்டத்தை சிந்து வென்று இருப்பதால் ஏற்கனவே வைத்திருந்த கிளைமாக்சை மாற்றி புதிய கிளைமாக்ஸ் வைக்க இருக்கிறோம். சிந்து வாழ்க்கையை படமாக்குவது சவால் நிறைந்ததாக இருக்கும்” என்றார்.

Cinema News Tags:சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனே

Post navigation

Previous Post: தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளத்தில் ரஜினிகாந்த நடித்த காட்சி
Next Post: தண்டகன் படம் இசை வெளியீடு விழாவில் கலந்து கொண்டு பேசிய டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்

Related Posts

Blue Whale Tamil Movie Audio Launch-www.indiastarsnow.com கவிஞர் சினேகன் ஆன்லைனில் டிக்கெட் பதிவில் 25 சதவீதம் யாருக்குச் செல்கிறது? Cinema News
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகள் என்ற உறவைச் சொல்லிக்கொண்டு இயக்குநர் சேரன் லாஸ்லியாவிடம் அத்துமீறி நடந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகள் என்ற உறவைச் சொல்லிக்கொண்டு இயக்குநர் சேரன் லாஸ்லியாவிடம் அத்துமீறி நடந்து Cinema News
Kanda Naal Mudhal launching June 13,2022 | Colors Tamil Kanda Naal Mudhal launching June 13,2022 | Colors Tamil Cinema News
ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி ஆச்சரியத்தில் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி ஆச்சரியத்தில் தென்னிந்திய சினிமா ரசிகர்கள்!! Cinema News
காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டுக்கு காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள் Cinema News
'RX 100' director Ajay Bhupathi collaborates with 'Kantara' fame Ajaneesh Loknath ‘RX 100’ director Ajay Bhupathi collaborates with ‘Kantara’ fame Ajaneesh Loknath Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme