சென்னை:
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 73.10 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ67.90-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.
சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறை கைவிடப்பட்டு தினந்தோறும் என்ற அடிப்படையில் பெட்ரோல், டீசல் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னையில், நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.73.01-க்கும், டீசல் விலை ரூ.67.81-க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 9 காசுகள் அதிகரித்து ரூ 73.10-க்கும், டீசல் விலையும் 9 காசுகள் அதிகரித்து ரூ67.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.