Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

வங்கக் கடலில் காற்று சுழற்சி நீடிப்பதாலும் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்யும்

வங்கக் கடலில் காற்று சுழற்சி நீடிப்பதாலும் தமிழகத்தில் மழை பெய்யும்

Posted on June 24, 2019 By admin No Comments on வங்கக் கடலில் காற்று சுழற்சி நீடிப்பதாலும் தமிழகத்தில் மழை பெய்யும்

சென்னை:
தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பகுதியில் இருந்து காற்றும் வீசி வருவதால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளதாலும் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, வங்கக் கடல் பகுதியிலும் வளி மண்டல மேல் அடுக்கில் உருவாகியுள்ள காற்று சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று, நடுவட்டம், தோவாளை ஆகிய இடங்களில் 40 மிமீ மழை பெய்துள்ளது. வால்பாறை 30 மிமீ, சத்தியபாமா பல்கலைக் கழகம், காஞ்சிபுரம், குன்னூர் 20 மிமீ, தாம்பரம், அரக்கோணம், திருத்தணி, தரமணி, பெரும்புதூர், பெரியாறு, சென்னை விமான நிலையம், காவேரிப்பாக்கம் 10 மிமீ பெய்துள்ளது.

இதற்கிடையே, வேலூர், திருத்தணி, பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், மதுரை ஆகிய இடங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் 99 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், படிப்படியாக தமிழகத்தில் வெயில் குறைந்து வருவதாலும், வங்கக் கடலில் காற்று சுழற்சி நீடிப்பதாலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், காரைக்கால், புதுச்சேரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

Genaral News Tags:சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, வங்கக் கடலில் காற்று சுழற்சி நீடிப்பதாலும் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்யும்

Post navigation

Previous Post: இந்தியன் பீட்ரூட் பிரியாணி
Next Post: கட்டுப்பாடின்றிச் செயல்படுபவர்கள் உடனடியாக தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து அகற்றப்படுவார்கள்

Related Posts

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பாஜகவின் காவி வேட்டி பார்சல் ❗ Genaral News
இந்து தீவிரவாதம் என கருத்து கூறிய கமல்ஹாசனை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நமது அம்மா! Genaral News
தி ஐ’ எனும் சர்வதேச திரைப்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன் Genaral News
பாஜகவை சேர்ந்த 3 பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ. 500 கொடுத்துச்சென்றாக Genaral News
சென்னை விமான நிலையத்தில் இருந்து முதன் முறையாக எத்தோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகருக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து முதன் முறையாக எத்தோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகருக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. Genaral News
மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்ள முடிவு மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்ள முடிவு? Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme