Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கட்டுப்பாடின்றிச் செயல்படுபவர்கள் உடனடியாக தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து அகற்றப்படுவார்கள்

Posted on June 24, 2019August 27, 2019 By admin No Comments on கட்டுப்பாடின்றிச் செயல்படுபவர்கள் உடனடியாக தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து அகற்றப்படுவார்கள்

சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் அமைக்கப்பட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது சில நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்காக அமைக்கப்பட்டதல்ல. இந்தியாவின் இறையாண்மையைக் காக்க வேண்டும்; சாதி மத பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்; சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டதாகும். இந்தக் கூட்டணியைக் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தியும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் உயர்ந்த நோக்கத்தோடு அமைத்தார்கள்.

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கன் கலைவதாம் நட்பு” என்னும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, இந்தியாவின் பிரதம மந்திரி வேட்பாளராக தலைவர் ராகுல் காந்தியை, மு.க.ஸ்டாலின் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி முன்மொழிந்தார். இதன்மூலம் கோடிக்கணக்கான தேசிய தோழர்களின் இதயத்தில் மு.க.ஸ்டாலின் நீங்கா இடம் பெற்றிருக்கிறார். இந்த வரலாற்று புகழ் பெற்ற கூட்டணியைச் சிலர் சிறு ஆசைக்காகச் சிதைப்பது என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. தனி மனித லாப நஷ்டங்களையும் ஆசைகளையும் தவிர்த்து, சீறிய லட்சியத்திற்காக தியாகம் செய்திட வேண்டும் என்பது தான் தேசிய இயக்கத்தின் உயிர்மூச்சாகும். இன்றைய நிலையில், சாதியையும் மதத்தையும் சொல்லி மக்களின் அறியாமையை மூலக்கருவாகக் கொண்டு, மகாத்மா காந்தியின் இந்தியாவைச் சிதைத்துவிடலாம் என்று சில சக்திகள் நினைக்கிறார்கள்.

கூட்டணியைப் பற்றியோ, தேர்தல்களை பற்றியோ, கூட்டணிக் கட்சிகளோடு பேசுகிற அதிகாரம் காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே உண்டு,
மற்றவர்கள் அதுபற்றி பேசுதல் கூடாது.தங்களுக்கு தோன்றும் எண்ணங்களை நேரிலோ, கடிதம் மூலமோ காங்கிரஸ் தலைமைக்குத் தெரிவிக்கலாமே தவிர, ஊடகங்கள் மூலமாக எந்தச் செய்தியையும் யாரும் தெரிவிக்கக் கூடாது. அப்படி கட்டுப்பாடின்றிச் செயல்படுபவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து அகற்றப்படுவார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் முன்னோடி கே.என்.நேரு சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட உரிமை. திமுகவின் தலைமையில் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைக்கப்பட்டதென்பது, தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாலினின் உதிரத்தால் கையெழுத்திட பெற்றதாகும். அதனை அழகிரி நினைத்தாலும் அல்லது நேரு நினைத்தாலும் பிரித்துவிட முடியாத உறுதியான கூட்டணியாகும். தமிழகத்தில் கடந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றியைப்போல தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற அனைவரும் இணைந்து செயல்படுவோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்து.

Political News Tags:கட்டுப்பாடின்றிச் செயல்படுபவர்கள் உடனடியாக தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து அகற்றப்படுவார்கள்

Post navigation

Previous Post: வங்கக் கடலில் காற்று சுழற்சி நீடிப்பதாலும் தமிழகத்தில் மழை பெய்யும்
Next Post: பாமகவின் 12 தீர்மானங்கள் பின்னர் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்

Related Posts

வெளியே வந்தார் ப.சிதம்பரம் வெளியே வந்தார் ப.சிதம்பரம் Political News
இந்தியா ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்குவதற்கான முன்பணத்தை செலுத்தியது Political News
நடிகர் அயுப்கான் தெலுங்கானா ஆளுனர் திருமதி தமிழிசை சந்தித்தார் Cinema News
பிரதமர் மோடி பதில் பிரதமர் மோடி பதில் Political News
பாமகவின் 12 தீர்மானங்கள் பின்னர் கூட்டத்தில் ராமதாஸ் பேசு பாமகவின் 12 தீர்மானங்கள் பின்னர் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில் Political News
தலை கவசம் முக்கியத்துவம் குறித்து மாபெரும் வாகன பேரணி ஆவடியில் நடைபெற்றது தலை கவசம் முக்கியத்துவம் குறித்து மாபெரும் வாகன பேரணி ஆவடியில் நடைபெற்றது Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme