Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை பற்றாக்குறை தான்!!!

Posted on June 24, 2019June 24, 2019 By admin No Comments on அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை பற்றாக்குறை தான்!!!

சென்னை:
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்பது இல்லை இல்லை, பற்றாக்குறை தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கவிஞர் கண்ணதாசனின் 93வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தண்ணீர் தட்டுப்பாட்டை சீர் செய்ய முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.

குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் என்பது இல்லை, குடிநீர் பற்றாக்குறை இருக்கலாம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எதிர்க்கட்சிகள் தண்ணீர் விஷயத்தை பெரிதாக்கி போராட்டம் நடத்துகிறது. ஜோலார்பேட்டை நீர் தண்ணீர் வரக்கூடாது என்பது சென்னை மக்களுக்கு செய்யும் துரோகம். எனவே, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை பொறுத்தவரை, எந்த பகுதி மக்களுக்கும் பாதிப்பில்லாமல் நிறைவேற்றப்படும். ஜிஎஸ்டி வரி வருவாய் வகையில், மத்திய அரசு 6,000 கோடி ரூபாய் தரவேண்டியுள்ளது. அதைப் பெறுவதற்காக அழுத்தம் தரப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Genaral News Tags:அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை பற்றாக்குறை தான், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை பற்றாக்குறை தான்

Post navigation

Previous Post: பாமகவின் 12 தீர்மானங்கள் பின்னர் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்
Next Post: Sathyabama Institute of Science and Technology celebrated Col. Dr. Jeppiaar Science Awareness Day

Related Posts

நட்புனா என்னானு தெரியுமா படம் எப்படியிருக்கு பார்ப்போம் வாங்க Genaral News
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி குறித்து பிரபல பாடகர் Genaral News
பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது எப்படி பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது எப்படி Genaral News
Bollywood actress Isha Deol loses 16 kg-indiastarsnow.com “ஹேமமாலினியின் சுயசரியதையில் நடிப்பேனா..? ; கலர்ஸ் நிகழ்வில் ஈஷா தியோல் விளக்கம் Genaral News
chennai met_www.indiastarsnow.com சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது Genaral News
தமிழக சந்னதயில் டசயல்பாடுகனள விரிவாக்க திட்ெம் உலகின் முன்னணி வாசனை திரவியங்கள் நிறுவனமாக திகழும் டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் எஸ்டிஆர் நியமனம் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme