கடந்த 5 ஆண்டில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது. நேற்று காலை தங்கம் ஒரு கிராம் ரூ.3211க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் ஒரு கிராம் தங்கத்தின் நிலை ரூ.3213ஆக இருந்தது. நேற்று மட்டும் தங்கத்தின் விலையில் ஒரு சவரன் ரூ.528 உயர்ந்தது. இந்தநிலையில், இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.3271க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் கிராமுக்கு ரூ.58 உயர்ந்துள்ளது. ஒரு பவுனுக்கு ரூ.464 உயர்ந்தது. இதனால் தங்கம் ஒரு சவரன் ரூ.26,168க்கு இன்று காலை விற்பனையானது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
