Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

Posted on June 21, 2019June 21, 2019 By admin No Comments on ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி:
ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக இன்று வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பு சார்பில் ஆண்டு தோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான இந்தியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், ஆகிய‌வை இடம்பெறுகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு வளர்ந்து வரும் நாடுகளின் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பை ஏற்ற பிரதமர் பங்கேற்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஜப்பானில் நடைபெறும் ஜி-20 நாட்டில் ஜூன் 27-ம் தேதி முதல் 29ம் தேதி வரை பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

Genaral News Tags:ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

Post navigation

Previous Post: வக்கீல் மக்களின் உரிமைகளுக்காக பணியாற்றுங்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி வேண்டுகோள்
Next Post: தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும்!!!!

Related Posts

Goa party-www.indiastarsnow.com கோவாவில் நிர்வாண பார்ட்டி!!!! Cinema News
ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கும் ராகுல் காந்தி-மீண்டும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் Genaral News
சென்னை விமான நிலையத்தில் இருந்து 112 பேருடன் புறப்பட்டஇண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கபட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 112 பேருடன் புறப்பட்டஇண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கபட்டது. Genaral News
commissioner A.K.Viswanathan-indiastarsnow.com சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித் Genaral News
Suhasini Maniratnam, Radhika Sarathkumar, Jayashree, Thilak Venkatasamy, Ezhilan MLA presented the queen award to Ms. Nithya for her achievement in home food preparation at the Shero 2022 Awards » Suhasini Maniratnam, Radhika Sarathkumar, Jayashree, Thilak Venkatasamy, Ezhilan MLA presented the queen award to Ms. Nithya for her achievement in home food preparation at the Shero 2022 Awards Genaral News
Colors Tamil celebrates May Day with a lineup of insightful shows Colors Tamil celebrates May Day with a lineup of insightful shows Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme