Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை

Posted on June 5, 2019 By admin No Comments on மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை

மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை வழங்க ட்ரீ ஆம்புலன்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

ஜூன் 5ஆம் தேதி
உலக சுற்றுசூழல் தினம் கடைப்பிக்கப்படுவதை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் பயணிக்க உள்ளது. முன்னோட்டமாக சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் வேரோடு சாய்ந்த மரம் மாற்று இடத்தில் நடப்பட்டது.

SASA குழுமத்தின் முன்முயற்சியில் பசுமை மனிதர் டாக்டர் அப்துல்கனி வழிக்காட்டுதலில் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு மே 22ஆம் தேதி அறிமுகப்படுத்தினார்.

“ஜூன் 5ஆம் தேதி தொடங்கும் ஆம்புலன்ஸ் சேவை முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பயணம் செய்ய உள்ளது. பின்னர் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மரக்கன்றுகள் நடுதல் மரங்களுக்கு முதலுதவி வழங்கும் பணிகளில் ஈடுபட உள்ளது. இருமாதங்களில் தலைநகர் டெல்லியை சென்றடைய உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்களில் மரக்கன்றுகள் வழங்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளதாக” அப்துல்கனி தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு SAF விளையாட்டு கிராமத்தில் வேரோடு சாய்ந்த மரங்கள் நாளை காலை 11 மணிக்கு மறுபதியம் செய்யப்பட உள்ளது.

மரங்களுக்கான ஆம்புலன்ஸில் மரங்களுக்கு முதலுதவி, வேரோடு சாய்ந்த மரங்கள் மறு பதியம் இடுதல், விதை வங்கி, விதைப் பந்து வழங்குதல், மரக்கன்று வழங்குதல், மரம் நட உதவிபுரிதல், மரங்களை மாற்று இடத்தில் நடுதல், சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ளது. ஆம்புலன்ஸில் வல்லுனர்கள், தன்னார்வலர்கள், உபகரணங்கள் பயணம் செய்ய உள்ளனர்.

அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்ய உள்ள அப்துல்கனி மாநில முதலமைச்சர்களை சந்தித்து மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த மனு அளிக்க உள்ளார்.

ஆம்புலன்ஸ் சேவையில் பச்சைநிற சைரன் விளக்குகள் பொருத்த அனுமதி வழங்கவும் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் சேவையை பெற 9941006786 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். www.treeambulance.org என்ற இணையதளம் வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம்.

“தற்போது தன்னார்வலர்களின் உதவியோடு செய்யப்பட்டு வரும் மரம் நடும் சேவை, அடுத்தகட்டமாக தனியங்கி முறையில் மரங்களை அப்புறப்படுத்தி மாற்று இடத்தில் நடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்துவதே நோக்கம்” என்று ஆம்புலன்ஸ் சேவைக்கு உதவும் SASA குழு நிறுவர் சுரேஷ் கிருஷ்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.

Genaral News Tags:ட்ரீ ஆம்புலன்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது., மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை

Post navigation

Previous Post: Actor Jeevan in Up Coming Thriller Film ASARIRI
Next Post: Tree Ambulance to travel from Chennai to all over India

Related Posts

தொண்டர்களின் மகிழ்ச்சிதான் தனது உயிர்மூச்சு என மோடி வாரணாசியில் பேச்சு!!!! Genaral News
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் யார்.. பரபரக்கும் ஹேஷ்யங்கள்.. கேரளாவுக்கு வாய்ப்பு Genaral News
வக்கீல் மக்களின் உரிமைகளுக்காக பணியாற்றுங்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி வேண்டுகோள் Genaral News
மலைகளின் இளவரசி கொடைக்கானல் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பீர்! Genaral News
சூரி ஹீரோவாகும் வெற்றிமாறனின் புதிய படம்...2 ம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது சூரி ஹீரோவாகும் வெற்றிமாறனின் புதிய படம்…2 ம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது Genaral News
Singer Iykki Berry Brings To Town Rapsilla Concert At Phoenix Marketcity This Weekend Singer Iykki Berry Brings To Town Rapsilla Concert At Phoenix Marketcity This Weekend Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme