நான் ஈ புகழ் சுதீப் நடிக்கும் ‘பயில்வான்’ படத்தின் பர்ஸ்ட் லுக்
‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சுதீப். இதனை தொடர்ந்து இவர் ‘புலி’, ‘முடிஞ்சா இவன புடி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். கர்நாடக மொழியில் பல படங்கள் நடித்துள்ள இவர் பிரபல தொலைக்காட்சியில் 2017 மற்றும் 2018ம் ஆண்டு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கர்நாடகாவில் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் தற்போது ‘பயில்வான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி மொழிகளில் உருவாகிவருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.