புதுடெல்லி, நடிகை ரம்யா கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்தான் காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர்
இவர் டுவிட்டரில் பரபரப்பாக இயங்கி வந்தார். இந்த நிலையில் தற்போது இவர் திடீரென டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறி விட்டது தெரிய வந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்மலா சீதாராமன் மத்திய நிதி மந்திரி பதவி ஏற்றபோது அவருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவு வெளியிட்டார். அது அவருக்கு கட்சியில் கண்டனங்களுக்கு வழி வகுத்தது.