Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தமிழகம் முழுவதும் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது

Posted on June 3, 2019 By admin No Comments on தமிழகம் முழுவதும் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது

சென்னை,

பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘மாணவர்கள் கல்வி நலனை கருத்தில் கொண்டு, திட்டமிட்டப்படி ஜூன் 3-ந்தேதி (இன்று) பள்ளிகள் திறக்கப்படும்’ என்று அறிவித்தார். அதன்படி 50 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியவுடனேயே விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகளை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை பள்ளி கல்வி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படும். அதே வேளையில், ஒரு சில தனியார் பள்ளிகள் வருகிற 7-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை), சில தனியார் பள்ளிகள் 10-ந்தேதியும் (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று அந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

Genaral News Tags:தமிழகம் முழுவதும் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது

Post navigation

Previous Post: ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பயங்கரவாத தாக்குதல்கள் தீவிரமடைய தொடங்கி உள்ளது.
Next Post: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்!!!!

Related Posts

ePass for Lockdown-indiastarsnow.com இ- பாஸ் இல்லாமல் மாற்று வழியில் வேலூருக்கு நுழையும் மக்கள் Genaral News
சென்னை சத்யா ஸ்டுடியோவில் நடிகர் ஐசரி வேலனின் 33ம் நினவு அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் Genaral News
Banaras Pre-release Event in Hubli Genaral News
தமிழக அரசின் இ பாஸ் செல்லாது-indiastarsnow.com தமிழக அரசின் இ பாஸ் செல்லாது?????? Genaral News
திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு  Genaral News
நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ அப்டேட் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme