நெத்திலி மீன் – 200 கிராம்,
சிறிய வெங்காயம் – 100 கிராம்,
தக்காளி – 150 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது – 80 கிராம்,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – 1 கொத்து,
கடுகு – 5 கிராம்,
வெந்தயம் – 5 கிராம்,
மிளகு 10 – கிராம்,
சீரகம் – 5 கிராம்,
தேங்காய் விழுது – 100 கிராம்,
எண்ணெய் – 100 மி.லி.கிராம்,
கலந்த மிளகாய்த்தூள் – 20 கிராம்,
மஞ்சள் தூள் – 5 கிராம்,
தனி மிளகாய்த்தூள் – 10 கிராம்,
புளி – 15 கிராம்,
உப்பு – தேவைக்கு,
பெரிய வெங்காயம் – 1.
செய்முறை
மிளகு, சீரகம், சின்ன வெங்காயத்தை எண்ணையில் வதக்கி பிறகு அரைத்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணை சேர்த்து அதில் கடுகு, வெந்தயம், சேர்த்து தாளிக்கவும். பிறகு பெரிய வெங்காயத்தை ேசர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்கியதும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கலந்த மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி நன்கு மசிந்து வரவேண்டும். பிறகு புளி தண்ணீர் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவேண்டும். பிறகு மீன் துண்டுகளை சேர்த்து மூடிப்போட்டு அடுப்பை அணைத்துவிடவேண்டும். மீன் அந்த சூட்டிலேயே வெந்திடும். பிறகு கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அலங்கரிக்கவும்.