சென்னை :
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தினை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த சிறப்புப் பிரிவு மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தில் பாலின மாற்று பன்னோக்கு உயர் சிகிச்சைகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இம்மையத்தில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் (Plastic Surgeon), நாளமில்லா சுரப்பியல் மருத்துவர் ((Endocrinologis), பால்வினை நோய் இயல் மருத்துவர் (Venerologis), மனநல மருத்துவர் (Psychiatris) உட்பட அனைத்து சிறப்பு மருத்துவக் குழுக்களும் செயல்படும். அறுவை சிகிச்சைகளுக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இம்மையத்தில் சிறப்பு மருத்துவ குழு செயல்பட உள்ளது.