Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சென்னையில் சிக்னல் கிடைக்காத செல்போனை விற்பனை செய்த நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து

Posted on June 3, 2019 By admin No Comments on சென்னையில் சிக்னல் கிடைக்காத செல்போனை விற்பனை செய்த நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து

சென்னை:
சென்னையில் சிக்னல் கிடைக்காத செல்போனை விற்பனை செய்த நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பூரை சேர்ந்தவர் வடிவேல். கடந்த 2016ம் ஆண்டு ஆன்லைன் மூலம் ரூ.20 ஆயிரத்து 99 கொடுத்து செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த செல்போன் வாங்கிய நாள் முதல் சில கோளாறுகள் ஏற்பட்டு வந்துள்ளது. முக்கியமாக நெட்வர்க் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் வடிவேல் அவதி அடைந்து வந்துள்ளார். மேலும் தொடுதிரையும் சரியாக வேலை செய்யவில்லை. இதுபற்றி சர்வீஸ் சென்டரில் பலமுறை புகார் அளித்தும் சரி செய்ய முடியவில்லை.

வடிவேல் வக்கீல் என்பதால் தொழில் சம்பந்தமாக யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் அவதியடைந்து வந்துள்ளார். இந்த நிலையில் செல்போன் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கோரி சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி லக்‌ஷ்மிகாந்தம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி செல்போன் வாங்கி மனுதாரர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதை உறுதி செய்தார். இதனால் செல்போன் நிறுவனம் மனுதாரர் வடிவேலுக்கு செல்போனின் விலை ரூ.20 ஆயிரத்து 99 மற்றும் இழப்பீடு, மன உளைச்சலுக்கு சேர்த்து ரூ.15 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

Genaral News Tags:சென்னையில் சிக்னல் கிடைக்காத செல்போனை விற்பனை செய்த நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து

Post navigation

Previous Post: சென்னையில் இன்று மாலை கலைஞரின் 96வது பிறந்தநாள் விழா
Next Post: தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நடந்தது

Related Posts

Sembi Audio Launch Event Genaral News
டெல்லியில் மருத்துவமனைக்கு வந்திருந்த பெண்கள் 3 பேர் திடீரென வளாகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்!!! Genaral News
மீரா மிதுன் செய்தியாளர் சந்திப்பு ?? Genaral News
இந்தியாவின் அதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சோதனை வெற்றி Genaral News
COLORS Tamil to showcase the spirit of resurgence through its latest fiction shows; Launches Thari and Malar to spruce up prime time content Genaral News
South Indian Star Nikki Galrani emphasised on the need for both genders to learn basic life skills to stay ahead Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme