Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சென்னையில் இன்று மாலை கலைஞரின் 96வது பிறந்தநாள் விழா

Posted on June 3, 2019 By admin No Comments on சென்னையில் இன்று மாலை கலைஞரின் 96வது பிறந்தநாள் விழா

சென்னை:
கலைஞரின் 96வது பிறந்தநாள் விழா, தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் சென்னையில் இன்று மாலை நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.முத்தமிழறிஞர் கலைஞரின் 96வது பிறந்தநாள் விழா ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாள் விழா மற்றும் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் திமுக சார்பில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு திமுக பொது செயலாளர் அன்பழகன் தலைமை வகிக்கிறார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ வரவேற்புரையாற்றுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுக்கிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் சுப.வீரபாண்டியன், பொன்.குமார், தர் வாண்டையார், எஸ்றா.சற்குணம், இனிகோ இருதயராஜ், முருகவேல்ராஜன், பி.வி.கதிரவன், அதியமான், கு.செல்லமுத்து, எர்ணாவூர் நாராயணன், திருப்பூர் அல்தாப், பஷீர் அகமது, பி.என்.அம்மாவாசி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.முன்னதாக கலைஞரின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

தொடர்ந்து காலை 10 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள்-சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறுகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள்-சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Genaral News Tags:கலைஞரின் 96வது பிறந்தநாள் விழா, சென்னையில் இன்று மாலை கலைஞரின் 96வது பிறந்தநாள் விழா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுக்கிறார்

Post navigation

Previous Post: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்!!!
Next Post: சென்னையில் சிக்னல் கிடைக்காத செல்போனை விற்பனை செய்த நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து

Related Posts

Actor Munishkanth starrer “Middle Class” shooting commences Actor Munishkanth starrer “Middle Class” shooting commences Cinema News
PARAMAGURU FITNESS VILLAGE-indiastarsnow.com PARAMAGURU FITNESS VILLAGE LAUNCH at CHENNAI Genaral News
ஜீவனின் அறிவியல் புனைவு திரில்லர் படம் அசரீரி Genaral News
SETTING AN EXAMPLE AND A MILESTONE ON TEACHERS’ DAY An attempt to create yet another world record by teacher & student duo, Dr. Kavitha Moahan & Neha Suresh Attri. SETTING AN EXAMPLE AND A MILESTONE ON TEACHERS’ DAY An attempt to create yet another world record by teacher & student duo, Dr. Kavitha Moahan & Neha Suresh Attri. Genaral News
NEW Porsche 718 Cayman GT4 RS Review NEW Porsche 718 Cayman GT4 RS Genaral News
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144தடை உத்தரவு அமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144தடை உத்தரவு அமல் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme