Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கிண்டி சிறுவர் பூங்காவில் போதிய தண்ணீர் இல்லாததால் விலங்குகள் பறவைகள் நீரின்றி தவிக்கும் நிலை??

Posted on June 3, 2019 By admin No Comments on கிண்டி சிறுவர் பூங்காவில் போதிய தண்ணீர் இல்லாததால் விலங்குகள் பறவைகள் நீரின்றி தவிக்கும் நிலை??

சென்னை:
கிண்டி சிறுவர் பூங்காவில் போதிய தண்ணீர் இல்லாததால் விலங்குகள் பறவைகள் நீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் சென்னையை பொறுத்தவரயில் மாநகர மக்களின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் உள்ளன. இந்நிலையில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் 55 சதவீதம் குறைவாகவே பெய்தது. 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில் வடகிழக்கு பருவமழையின் போது நீர் சேமிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீராக வழங்கப்படுகிறது.

சென்னை மாநகரில் நாள் ஒன்றுக்கு 80 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு குறைவாகவே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு பூங்கா, சுற்றுலா தளம் போன்றவைகளிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்காவில் போதிய தண்ணீர் இல்லாததால் விலங்குகள் பறவைகள் நீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிண்டியில் உள்ள தேசிய சிறுவர் பூங்காவில் ஏராளமான பறவைகள், பல்வேறு வகையான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை சமாளிக்க பூங்கா நிர்வாகம் தற்காலிக நீர்நிலைகளை அமைத்துள்ளது. விலங்குகள் மற்றும் பறவைகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க கூண்டுகளில் ஈர சாக்கு பைகள் கட்டப்பட்டு, தண்ணீர் பீச்சு குளிர்விக்கப்பட்டு வருகின்றன.

Genaral News Tags:கிண்டி சிறுவர் பூங்காவில் போதிய தண்ணீர் இல்லாததால் விலங்குகள் பறவைகள் நீரின்றி தவிக்கும் நிலை??

Post navigation

Previous Post: கலைஞர் வாழ்ந்து கொண்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்
Next Post: சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவம்

Related Posts

Realme X50 Pro vs IQOO 3, வித்தியாசங்கள் மற்றும் சிறப்புகள் என்னென்ன Realme X50 Pro vs IQOO 3, வித்தியாசங்கள் மற்றும் சிறப்புகள் என்னென்ன? Genaral News
சரண் இயக்கும் மார்கெட் ராஜா MBBS படத்தில் நடிகர் ஆரவ் – நடிகை நிகிஷா படேல் Genaral News
ரோஜர் பெடரர், நடால் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர் Genaral News
42nd National Masters Athletics Championship 2022 PhillipCapital” 42nd National Masters Athletics Championship 2022 Genaral News
sustainable fashion designer book launched sustainable fashion designer book launched Genaral News
இளநீர் வழுக்கையிலிருந்து தயாரிக்கப்படும் பயோடானிக்குகளை அருந்துவதால் ஏற்படும் பலன்கள்!!!!! Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme