Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பணம் வீணாகாமல் உடற்பயிற்சி செய்ய புதிய வழி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம் Shape App மூலம் ஜிம்களில் பயிற்சி செய்யும் வசதி

Posted on June 2, 2019June 2, 2019 By admin No Comments on பணம் வீணாகாமல் உடற்பயிற்சி செய்ய புதிய வழி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம் Shape App மூலம் ஜிம்களில் பயிற்சி செய்யும் வசதி

பணம் வீணாகாமல் உடற்பயிற்சி செய்ய புதிய வழி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம் Shape App மூலம் ஜிம்களில் பயிற்சி செய்யும் வசதி

இந்தியாவிலேயே முதன் முறையாக உடற்பயிற்சி செய்யும் நேரத்திற்கு மட்டும் ஜிம்மிற்கு பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டு கட்டணம், அரையாண்டு கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஜிம்மிற்குள் செல்ல முடியும் என்ற காலம் இனி மலையேறிப் போச்சு. எவ்வளவு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறோமோ அந்த நேரத்திற்கான கட்டணத்தை மட்டுமே செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண கட்டணத்தில் இனி நீங்கள் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய முடியும்.

யுனிக் ஆங்கிள் டெக்னாலஜிஸ் நிறுவனம் உருவாக்கி உள்ள Shape app மூலம் இனி இந்த வசதியை தமிழகம் முழுவதும் பெறமுடியும். சென்னையில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் ‘ஷேப் ஆப்பை’ ஆற்காடு இளவரசர் நவாப்சதா டாக்டர் முகமது ஆசிப் அலி மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் உடற்கட்டு சங்க செயலாளர் அரசு ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான ஜிம்கள் ஷேப் ஆப் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. Shape appஐ டவுன்லோடு செய்தபிறகு, உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஜிம்மை நீங்கள் அடையாளம் காணமுடியும். ஆப்பை டவுன்லோடு செய்யும்போதே உங்கள் பேக்கேஜையும் தேர்வுசெய்துகொள்ளலாம். 50 மணிநேரம் முதல் 200 மணி நேரம் வரை பேக்கேஜ் உள்ளது. மணிக்கு வெறும் 50 ரூபாயிலிருந்து கட்டணம் தொடங்குகிறது. அதேபோல 2500 ரூபாய் முதல் உங்கள் பேக்கேஜை தேர்வு செய்துகொள்ள முடியும். கட்டணத்திற்கு காலாவதி காலம் எதுவும் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் வசதியை ஷேப் ஆப் வழங்குகிறது.

“ஜிம்மிற்கு பயிற்சிக்கு செல்லும்போது ஆப்பில் உள்ள QR கோடு ஸ்கேன் செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுவீர்கள். பயிற்சியை தொடங்கியதும் உங்கள் நேரம் கணக்கிடப்பட்டு ஒரு மணிநேரம் நிறைவடைய 10 நிமிடங்களுக்கு முன்னதாக அலர்ட் மெசேஜ் கிடைக்கும். வாடிக்கையாளர் ஒருமணிநேரத்தை கடந்து பயிற்சி செய்வதாக இருந்தால் சம்மதம் கொடுத்து பயிற்சியை தொடரலாம். இதேநேரத்தில் ஜிம் மேலாளருக்கும் மேசேஜ் சென்றுசேரும். அவரும் உங்களை அலர்ட் செய்வார். ஷேப் ஆப் மூலம் எப்போது வேண்டுமானாலும், எந்த ஜிம்மிற்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆப்பில் உள்ள மேப் மூலம் எளிதில் வழியையும் கண்டுபிடிக்க முடியும். Shape App ஜிம்மின் அனைத்து சேவைகளையும் பட்டியலிடுகிறது. ஆப்பில் வெளியாகும் போன் நம்பர் மூலம் ஜிம்மிற்கு நேரடியாக தொடர்புகொள்ளலாம்” என்று கூறுகிறார் யுனிக் ஏஞ்சல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் CEO அல்தாப் சலீம்.

உங்கள் பயிற்சி நேரத்தை மற்றொரு பயனாளருக்கு மாற்றும் வசதியும் ஷேப் ஆப்பில் உள்ளது. உங்கள் பணம் வீணாகாமல் இருக்க ஷேப் ஆப் உத்தரவாதம் தருகிறது. ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்கள் மூலம் Shape App டவுன்லோடு செய்யமுடியும்.

Genaral News Tags:தமிழகத்தில் அறிமுகம் Shape App மூலம் ஜிம்களில் பயிற்சி செய்யும் வசதி, பணம் வீணாகாமல் உடற்பயிற்சி செய்ய புதிய வழி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம் Shape App மூலம் ஜிம்களில் பயிற்சி செய்யும் வசதி

Post navigation

Previous Post: இளையராஜா இசையில் பாடிய எஸ்.பி.பி
Next Post: SHAPE APP Launch Chennai

Related Posts

மிஸ்டர் லோக்கல் யாருடன் பார்க்கவேண்டிய படம்– சிவகார்த்திகேயன் Genaral News
கீர்த்தி சுரேஷ் மும்பைக்கு குடியேறுகிறாரா⁉ Genaral News
சென்னை சத்யா ஸ்டுடியோவில் நடிகர் ஐசரி வேலனின் 33ம் நினவு அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் Genaral News
First Ever Nationwide Epidemiological Diabetes Study Conducted; Key findings underscore the need for better control of glycemia, blood pressure and lipid parameters to prevent Diabetes-related complications First Ever Nationwide Epidemiological Diabetes Study Conducted; Key findings underscore the need for better control of glycemia, blood pressure and lipid parameters to prevent Diabetes-related complications Genaral News
vinayakar idol immersion-www.indiastarsnow.com சென்னையில்வி 2 ஆயிரத்து 300 நாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்கப்பட உள்ளன Genaral News
தமிழகதில் தண்ணீர் பஞ்சம் காரணமாக ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்க கடும் எதிர்ப்பு?? Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme