Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார்

Posted on June 2, 2019 By admin No Comments on நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார்

புதுச்சேரி:
புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரசை சேர்ந்த சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இதையடுத்து அந்த பதவி காலியாக உள்ளது. இதையடுத்து, சட்டசபை நாளை காலை 9.30 மணிக்கு கூட்டப்படுவதாக சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் நேற்று அறிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர்கள் பங்கேற்றுள்ளனர். துணை சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரசை சேர்ந்த சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட்டார். எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் சிவக்கொழுந்து ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். லாசுப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான சிவக்கொழுந்து இதற்கு முன் துணை சபாநாயராக இருந்தார். நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார்.

Genaral News Tags:நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார்

Post navigation

Previous Post: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
Next Post: மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!!

Related Posts

A monumental teaser launch for the most awaited film, Adipurush! Genaral News
Prashanth Hospitals Launches “Save Young Hearts” Film Festival in association with Loyola College Visual Communication Department Genaral News
Rahul tripathi-indiastarsnow.com ஐபிஎல் கிரிக்கெட் – 13 ஓவர் முடிவில் முடிவில் கொல்கத்தா அணி 109/3 Genaral News
nternational Women's Day was celebrated by GEO India Foundation. மகளிர் தினத்தை முன்னிட்டு ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் 15 க்கும் மேற்பட்ட பெண் ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. Genaral News
Meendum Movie celebrity show நடிகை அபிராமி, பா.இந்திரன், சுதர்சன் சேஷாத்ரி ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் ! Genaral News
“செங்களம்” படக்குழு -indiastarsnow அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களில் வெற்றியை கொண்டாடிய“செங்களம்” படக்குழு !!! Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme