Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய அரசு துறைகளில் காவல்துறை பிரதானமானது நடிகர் ஜெய்வந்த்!!!!

Posted on June 2, 2019June 2, 2019 By admin No Comments on மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய அரசு துறைகளில் காவல்துறை பிரதானமானது நடிகர் ஜெய்வந்த்!!!!

நேரம் – காலம், வெயில் – மழை, சொந்தம் – பந்தம், மனைவி – மக்கள், விருப்பு – வெறுப்பு என எதையும் பார்க்காமல் கடமையே கண்ணாக, மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய அரசு துறைகளில் காவல்துறை பிரதானமானது. அதிலும் குறிப்பாக போக்குவரத்து காவலர்களின் பணி அளப்பரியது.

நாம் அனைவரும் நமது கடமைகளில் மட்டும் கவனம் செலுத்துகின்ற வகையில், சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களை சீர்செய்தும், நெரிசல்கள் ஏற்படாவண்ணம் முன்னெடுப்புகளை செய்தும், நமது பயணத்தை எளிதாக்கி தருகிறார்கள்.

அத்தகைய மாமனிதர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், முதற்கட்டமாக எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சுமார் 50 காவலர்களுக்கு ஒரு கூலிங்கிளாஸ் வழங்கி யிருக்கிறார் நடிகர் ஜெய்வந்த்.

ஜெய்வந்த் ‘மத்திய சென்னை’, ‘காட்டுப்பய காளி’ ஆகிய திரைப் படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். தற்போது ‘அசால்ட்’ எனும் அதிரடி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வாய்ப்பினை தனக்கு ஏற்படுத்தித் தந்த காவல் துறையினருக்கும், இறைவனுக்கும் நன்றி தெரிவித்தார் ஜெய்வந்த்.

Genaral News

Post navigation

Previous Post: அமலாபால் நடித்த ‘ஆடை’ படத்தின் சென்சார் குறித்த தகவல்
Next Post: அஜித் வாங்கியிருக்கும் புதிய சொகுசு காரை, அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்

Related Posts

Tavji Character English Instagram UC Tavji Character English Instagram UC Genaral News
சென்னையில் பெட்ரோல் விலை குறைந்து Genaral News
மக்களை அலட்சியப்படுத்தியவர்கள் மக்களாலேயே வீழ்த்தப்படுவர்.. மோடியை தாக்கிய தேஜஸ்வி Genaral News
முனைவர் மா.ரா. செளந்தரராஜன் எழுதிய 'நில், கவனி, யோசி, செயல்படு...' நூல் வெளியீட்டு விழாவில் முனைவர் மா.ரா. செளந்தரராஜன் எழுதிய ‘நில், கவனி, யோசி, செயல்படு…’ நூல் வெளியீட்டு விழாவில் Genaral News
Registration open for boys and girls aged between 7 to 12 years Phoenix Marketcity To Host the Maiden Edition of “Little Miss and Master Chef” Genaral News
மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் சோனியாவின் முயற்சி வெற்றி பெறுமா??? Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme