சினிமா பிரபலங்கள் எதை செய்தாலும், எதாவது வாங்கினாலும் கூட வைரலாகி விடும். அதிலும் அஜித் போன்ற மாஸ் ஹீரோக்கள் என்றால் சொல்லவே வேண்டாம், அவரது ரசிகர்கள் அதை உலக அளவில் டிரெண்டாக்காமல் ஓய மாட்டார்கள்.
அந்த வகையில், அஜித் வாங்கியிருக்கும் புதிய சொகுசு காரை, அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
கார் மீது ஆர்வம் கொண்ட நட்சத்திரங்களில் அஜித் முக்கியமானவர். பல விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகள் இவரிடம் ஏராளமாக இருக்க, தற்போது வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை அஜித் வாங்கியுள்ளாராம். அந்த காரின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.