Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பாரம்பரிய சுவையுடன் அறிமுகமாகியிருக்கும் ‘ஆந்திரா டெலிகேஸி

Posted on June 1, 2019 By admin No Comments on பாரம்பரிய சுவையுடன் அறிமுகமாகியிருக்கும் ‘ஆந்திரா டெலிகேஸி

பாரம்பரிய சுவையுடன் அறிமுகமாகியிருக்கும் ‘ஆந்திரா டெலிகேஸி’ (Andhradelicacy)

இன்றைய சூழலில் கணவன் மனைவி என இருவரும் வேலைக்கு சென்று, வருவாய் ஈட்டினால் தான் குடும்பம் ஓடும் என்ற நிலையில், வீட்டின் அச்சாணியாகத் திகழும் சமையலறையில் பெண்களால் அதிக நேரம் செலவிட முடியாத நிலை உருவாகியிருக்கிறது. அதனால் கிடைத்த உணவை, சுவை குறைவாகயிருந்தாலும் அவசரம் அவசரமாக கொறித்துவிட்டு இயந்திரமாக சுழலுகிறார்கள். இதனால் தான் அறுபது எழுபதுகளில் வரவேண்டிய சுகவீனங்கள் நாற்பதுவயதுகளிலேயே எட்டிப்பார்க்கத் தொடங்கிவிடுகிறது.இதுகுறித்து கடந்த தலைமுறையினருக்கும், இந்த தலைமுறையினருக்கும் இடையே பல கருத்து முரண்கள் இருந்தாலும், சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதைப் போல், சுவையுடன் கூடிய இயற்கையான உணவு இருந்தால் தான் ஆரோக்கியத்துடன் கூடிய உடல் இருக்கமுடியும் என்பதை உணர்கிறார்கள். இதனை ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்து, இன்றைய இளந் தலைமுறையினருக்கு பாரம்பரிய சுவையும் மாறாமல், அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப சமையலுக்குத் தேவையான பொடி மற்றும் ஊறுகாய்களையும், நொறுக்குத் தீனிகளையும் தயாரித்து நியாயமான விலையில் அறிமுகப்படுத்துகிறது ‘ஆந்திரா டெலிகேஸி.’ (www.andhradelicacy.com)

சிங்கப்பூரில் நடைபெறும் உணவுத் தொடர்பான கண்காட்சியில் ஆண்டுதோறும் கலந்து கொண்டு ஏராளமான வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கும்‘ ஆந்திர டெலிகேஸி’பிராண்ட்டின் உரிமையாளரான திருமதி சௌஜன்யா (Sowjanya )அவர்களைச் சந்தித்து, ஃபாஸ்ட் புட் உணவு வகைகளும், ரெடி டூ ஈட் உணவு வகைகளும், பீட்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய கலாச்சார உணவுகள் ஆக்கிரமித்திருக்கும் ஆசிய உணவுச் சந்தையில் ‘ஆந்திர டெலிகேஸி’யை அறிமுகம் செய்திருப்பது குறித்தும், அதன்முக்கியத்துவம் குறித்தும் விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொண்டோம்.

“ நியூசிலாந்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பெங்களூரில் மனிதவளத் துறையில் பணியாற்றி விட்டு, ஆந்திராவை சேர்ந்த G..பரத் குமார் (G.Bharath kumar) என்பவரை திருமணம் செய்து கொண்டு, சென்னையில் செட்டிலாகிவிட்டேன். என்னுடைய கணவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் இந்த ‘ஆந்திரா டெலிகேஸி’ என்ற ப்ராண்ட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

கணவரின் பெற்றோர்கள் ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியைச் சேர்ந்தவர்கள். பண்ணை வைத்து விவசாயம் செய்து வருபவர்கள். அவர்கள் சென்னையில் வசிக்கும் எங்களுக்கு எனது மாமியார் விஜயலஷ்மி ,பெரிய மாமியார் விமலா பெரியம்மா ராதா அவர்களும் தேவையான ஊறுகாய், பொடி, நொறுக்குத்தீனி ஆகியவற்றை அவர்களே தயாரித்து அனுப்புவார்கள். திருமணத்திற்குப் பிறகு வேலை பளுவின் காரணமாக வேலையை விட்டுவிட்டேன். இந்த தருணத்தில் சென்னையில் ஒரிஜினலான ஆந்திரத்து பொடிகள், ஊறுகாய்கள், உணவு வகைகள், நொறுக்குத்தீனிகள் ஆகியவை தரமாகவும், இயற்கையான முறையிலும் தயாரித்து, சந்தையில் கிடைக்காத நிலையைக் கண்ணால் கண்டோம். பிறகு ஏன் நாமே தரமான, சுவையான ஆந்திரத்து பொடி, நொறுக்குத்தீனி, ஊறுகாய் ஆகியவற்றை தயாரித்து, சந்தையில் அறிமுகப்படுத்தக் கூடாது என எண்ணினோம். எண்ணியதுடன் நில்லாமல் கணவரின் திட்டமிடல், மாமியார், மாமனாரை ஒத்துழைப்புடன் செயலிலும் இறங்கினோம்.

எங்களுடைய நிலத்தில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு பொடி, ஊறுகாய், நொறுக்குத்தீனி ஆகியவற்றை சிறிய அளவில் தயாரித்து, அதனை ஆந்திரா டெலிகேஸி என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்ய தொடங்கினோம்.‘டெலிகேஸி’ என்றால் சுவை என்று அர்த்தம் என்பதால், அதனை இணைத்துக் கொண்டோம்.

எனது வளர்ச்சிக்கு எனது பெற்றோர்கள் திரு .டி .ராம்ராஜ் நாயுடு ,பத்ம பிரியா பெரிதும் உதவினார்கள் .எனது அண்ணன் டி .பரத் ராஜ் ,அண்ணி டி .லீனா எனது பிசினஸ்க்கு ஆலோசனை சொல்வோதோடு மட்டுமல்லாமல் என் பிசினஸ்க்கு பக்க பலமாக இருந்துள்ளார்கள் .என் தொழிலின் ஆலோசகர் மற்றும் குடும்ப நண்பர் திரு .சிதம்பரம் (கோவை ) அவர்கள் பிசினஸ்சில் உள்ள நெளிவு , சுழிவுகளை கற்றுக் கொடுத்துள்ளார் .என்னுடைய சித்தி ,சித்தப்பா எப்போதும் உற்சாகமான வார்த்தைகள் சொல்லி என்னை ஊக்கப்படுத்துவார்கள் . சிங்கப்பூரில் நான் கண்காட்சியில் பங்கேற்கும் போது என் தந்தையின் பள்ளி நண்பர் திரு .ராம் லக்ஷ்மி நாராயணன் uncle மற்றும் அவரது துணைவியார் ரேவதி ஆண்டி கண்காட்சி தொடங்கும் முதல் நாளில் இருந்து கண்காட்சி முடியும் கடைசி நாள் வரை எனக்கு பக்க பலமாக இருந்து எனக்கு தேவையான உணவு வகைகளை வீட்டில் இருந்து சமைத்து அன்போடு பரிமாறுவார்கள் .நான் மேற் கூறிய இவர்களுடைய ஆசிர்வாதங்கள் இல்லை என்றால் நான் இவ்வளவு தூரம் இவ்வளவு சீக்கிரம் முன்னேறி இருக்க முடியாது

உணவு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால் தயாரிப்புகளில் எந்தவித ரசாயனமும், செயற்கையான சுவையூட்டி மற்றும் நிறமூட்டிகளைக் கலக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். பயன்படுத்தும் எண்ணெயைக்கூட பாரம்பரிய முறைப்படி செக்கில் ஆட்டிய எண்ணெயைத் தான் பயன்படுத்துகிறோம். உணவு பொருட்களில் சேர்க்கும் உப்பு கூட கல் உப்பைத் தான் பயன்படுத்துகிறோம்.

நொறுக்கு தீனிகளில் கூட மைதாவை பயன்படுத்தாமல், கோதுமை மற்றும் அரிசியை மட்டும் தான் பயன்படுத்தி தயாரிக்கிறோம். இனிப்புகளில் கூட வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்க்கிறோம்.

எங்களின் தயாரிப்புகள்

Putharekalu Jaggery Dry Fruits

Putharekalu Jaggery Dry Fruits எனப்படும் பேப்பர் ஸ்வீட் என்ற இந்த இனிப்புகள், ஆந்திராவிலுள்ள (ஆத்ரேயபுரம்) என்ற பகுதியில் மட்டுமேஒரிஜினலாகக் கிடைக்கக்கூடியவை. நாங்கள் அந்த தயாரிப்பின் சூட்சுமத்தை தெரிந்து கொண்டு, தனித்த சுவையுடன் கூடிய அந்த இனிப்பை தயாரிக்கிறோம். இந்த வகையிலான இனிப்பை அரிசி, வெல்லம், பசு நெய், உலர் பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கிறோம். இதனை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வெளியில் வைத்தாலும், இரண்டு மாதம் வரை ஃப்ரெஷ்ஷாக சுவை மாறாமல் இருக்கும்.

கொப்புர பொடி எனப்படும் உலர்ந்த தேங்காய் துருவல் பொடி

உலர்ந்த கொப்பரைத் தேங்காயில் தயாரிக்கப்படும் பொடி இது. தேங்காயில் தயாரிப்பதால் விரைவில் கெட்டுவிடும் என்பார்கள். ஆனால் இது உலர்ந்த கொப்பரை தேங்காயை பாரம்பரிய முறைப்படி தயாரிப்பதால், ஃ பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் ஓராண்டு வரை இதனை அதே சுவையுடன் சாப்பிடலாம். வெளியில் வைத்தால் ஆறு மாதங்கள் வரை இதனை பயன்படுத்தலாம். ஆனால் இதனை பயன்படுத்தும் போது உலர்ந்த ஸ்பூனை பயன்படுத்துவது நல்லது.

நல்லகாரப் பொடி

நல்ல என்றால் தெலுங்கில் கருப்பு என்று பொருள். இந்தப் பொடியை இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிடுவதற்காக பயன்படுத்துவார்கள்.

வேர்க்கடலை பொடி

இதனை நொறுக்குத் தீனியாகவும் சாப்பிடலாம். உணவுடன் கலந்து அல்லது ரொட்டித் துண்டை டோஸ்ட் செய்து ரோஸ்ட் செய்யும் போதும் பயன்படுத்தி சாப்பிடலாம்.வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

GAVALU KARAM

இந்த நொறுக்குத்தீனி, பொதுவாக மைதா மாவில் தான் தயாரிக்கப்படும். ஆனால் நாங்கள் இதனை அரிசி மாவு மற்றும் ஓமம் கலந்து தனித்த சுவையுடன் தயாரிக்கிறோம். அதனால் இதனை எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். வயிறை பதம் பார்க்காது.

ஆவக்காய் ஊறுகாய்

ஆவக்காய் என்றால் மாங்காய், எங்களுடைய பண்ணையில் விளையும் மாங்காய் மற்றும் விளைப் பொருட்களைக் கொண்டு, பூண்டினைச் சேர்த்தும், பூண்டை சேர்க்காமலும் தயாரிக்கிறோம்.

கோங்குரா ஊறுகாய்

புளிச்சக்கீரையை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஊறுகாயை, ரசாயனம் எதையும் கலக்காமல் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கிறோம். இதனை உணவில் நேரடியாக கலந்தும் சாப்பிடலாம் அல்லது வெங்காயத்துடனும் சாப்பிடலாம்.

எங்களுடைய தயாரிப்பில் உருவான அனைத்து ஊறுகாய்களும் ஃபிரிட்ஜில் வைக்காமல் இருந்தாலும் கூட ஓராண்டு வரை சுவை மாறாமல் இருக்கும். பாரம்பரிய சுவை மாறாமல் இருப்பதற்காக ஊறுகாய்களில் நாங்கள் வினிகரைச் சேர்ப்பதில்லை.

எங்களுடைய தயாரிப்புகளை நீங்கள் வாங்கி சுவைக்க வேண்டும் என்றால், எங்களின் இணையதள முகவரியான www.andhiradelicacy.com என்ற இணையதளத்திலும் மற்றும் 0091 9940084448 என்ற whatsapp எண் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளலாம். உங்களின் நாவிற்கு புதுசுவையை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எங்களுடைய சேவைகள்

எங்களுடைய தயாரிப்புகளை சில நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறோம். சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் உணவு தொடர்பான கண்காட்சியில் கலந்துகொண்டு ஏராளமான வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறோம். இந்த ஆண்டில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். அந்த நாடுகளில் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் கண்டறியவிருக்கிறோம்.
ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்பட இருக்கும் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகையை முன்னிட்டு அதற்கான combo பேக்கினை நாங்கள் தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். நாங்கள் திருமணம் மற்றும் விசேஷ வைபவங்களுக்கு ஆர்டரின் பெயரில் சப்ளை செய்து வருகிறோம்.

பின்னூட்டம்

திரு.ஏவிஎம் சரவணன் அங்கிள் மற்றும் லட்சுமி ஆண்ட்டி ஆகிய இருவரும் எங்களது பெருமைக்குரிய வாடிக்கையாளர்கள். எங்களுடைய வளர்ச்சியில் அவர்களுடைய பங்கு அளப்பரியது.

அண்மையில் கோவையில் நடைபெற்ற ஒரு திருமண வைபவத்தின்போது எங்களின் சிறப்பு தயாரிப்பான பேப்பர் ஸ்வீட்டை (10,000) தயாரித்து வழங்கினோம். அதனை திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் சுவைத்து வித்தியாசமான சுவையாக இருக்கிறதே என்று திருமண வீட்டார்களை வாழ்த்தினார்கள்.

ஆந்திரா டெலிகேஸி என்ற பிராண்ட் பெயரை கேட்டவுடன், பெயரில் உள்ள ஆந்திரா என்ற வார்த்தையைப் பார்த்துவிட்டு, பொதுமக்கள் மத்தியில் காரம் அதிகம் என்ற மனப்பான்மையே இருக்கிறது. ஆனால் எங்களுடைய தயாரிப்புகளை வாங்கி சுவைப்பவர்கள். அதன் பிறகு எங்களிடம் வந்து ‘அதிக காரம் இல்லாமல், வித்தியாசமான சுவையுடன் இருக்கிறது என்று தங்களது எண்ணத்தை பதிவு செய்து விட்டு செல்வார்கள்.அவர்களை புதிய வாடிக்கையாளர்களையும் அறிமுகப்படுத்துவார்கள்.

தயாரிப்புகள்

ஊறுகாய்கள்

ஆவக்காய், இஞ்சி, கோங்குரா, எலுமிச்சை, பூண்டு

முருங்கக்காய், கத்திரிக்காய், நெல்லிக்காய், காலிபிளவர் போன்ற காய்கறிகளைக் கொண்டு

பொடி

பருப்பு பொடி, கருவேப்பிலை பொடி, பூண்டு பொடி, கொப்பரை தேங்காய் பொடி

நொறுக்கு தீனிகள்

சன்னக்காரா எனப்படும் காராசேவ்,கப்பல் காரம் எனப்படும் ஆந்திரத்து உருண்டைமுறுக்கு, ட்ரை ஃபுரூட் கேக்

அளவுகள்

எல்லா நொறுக்குத் தீனி தயாரிப்புகளும் 250 கிராம் என்ற அளவிலும் என்ற அளவில் தயாரிக்கிறோம்.

விலை

250 கிராம் நொறுக்குதீனியின் விலை 100 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்கிறோம்.

இலக்கு

விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் அல்லது மேன்சனில் தங்கி வேலை பார்க்கும் இளைஞர்கள் என பலருக்கும், ஆவக்காய் ஊறுகாய், கோங்குரா பொடி, பருப்பு பொடி என இந்த மூன்று இருந்தால் போதுமானது. அவர்கள் தங்களுடைய உணவுத் தேவையை ஒரளவு பூர்த்தி செய்து கொள்வார்கள். இந்த மூன்றும் தாராளமாக கிடைக்க வேண்டும். தரமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திரா டெலிகேஸியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

சென்னை முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பிரபலமான ஹோட்டல்கள் , ஏனைய இந்திய பெருநகரங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் என பல இடங்களில் எங்களுடைய தயாரிப்புகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது திட்டமிட்டுசெயல்பட்டு வருகிறோம்.

வாக்குறுதி

எங்களுடைய தயாரிப்புகள் கலப்படமற்றது. பாரம்பரிய சுவை கொண்டது. தரமானது. நியாயமான விலையும் கொண்டது. இதனை நீங்கள் ஒரு முறை வாங்கி சுவைத்து பார்த்தால் தான் இதன் தனித்த சுவையை உங்களால் உணர முடியும். அதன்பிறகு எங்களின் வாடிக்கையாளராகிவிடுவீர்கள்”.

Genaral News Tags:Andhradelicacy, பாரம்பரிய சுவையுடன் அறிமுகமாகியிருக்கும் ‘ஆந்திரா டெலிகேஸி

Post navigation

Previous Post: புகை பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்பு உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
Next Post: இளநீர் வழுக்கையிலிருந்து தயாரிக்கப்படும் பயோடானிக்குகளை அருந்துவதால் ஏற்படும் பலன்கள்!!!!!

Related Posts

நடிகர் பிரபாஸின் ‘புராஜெக்ட் கே’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. Genaral News
இந்தியாவிலிருந்து வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. ஷாக்கிங் ரிப்போர்ட்! Genaral News
இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்தாருடன் Genaral News
இந்திய கலாச்சாரத்தை இந்திய சினிமா பிரதிபலிக்கவில்லை Genaral News
ஆதார் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு. தமிழ் சினிமா எப்போதும் இந்திய சினிமாவிற்கு முன்னோடி அமீர் Genaral News
அசுரன் ட்ரைலரில் ஒவ்வொரு காட்சியிலும் மாஸ் காட்டும் தனுஷ் அசுரன் ட்ரைலரில் ஒவ்வொரு காட்சியிலும் மாஸ் காட்டும் தனுஷ் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme