Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகள்

Posted on June 1, 2019June 1, 2019 By admin No Comments on சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகள்

சென்னை:
தலைமை செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பிய சுற்றறிக்கையில், தலைமைச் செயலகம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பணியாளர் கையேட்டில் உடைகள் அணிவது தொடர்பாக சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஊழியர்கள் அனைவரும் தூய்மையான நேர்த்தியான உடை அணிய வேண்டும். அலுவலகத்தின் நன்மதிப்பைப் பராமரிக்கும் வகையில் ஊழியர்களின் உடைகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தலைமை செயலக ஊழியர்கள் பணிக்கு வரும் போது ஆண்கள் ஃபார்மல்ஸ் பேண்ட், ஷர்ட் மட்டுமே அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பெண்கள் சேலை, சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற உடைகளை அணியலாம் என்றும் ஆடைகளின் நிறம் அடர்த்தியாக இருக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சுடிதாருடன் துப்பட்டா அணிவது காட்டாயம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பாயங்களில் ஆஜராகும் போது பெண் ஊழியர்கள் இதே விதிமுறையை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆண்களின் ஆடைகள் அடர் வண்ணத்தில் பிறரின் கண்களைப் பறிப்பதாக இருக்கக் கூடாது எனவும் வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்கள் முழு நீள ஸ்லீவ் கொண்ட கோட் அணிந்து நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Genaral News Tags:சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகள், தலைமை செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகள்

Post navigation

Previous Post: நாடாளுமன்றத்தில் தமிழக மக்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்பது தான் ???
Next Post: DIVYA SATHYARAJ SUPPORTS NEWLY ELECTED MPs MIMI CHAKRABORTY AND NUSRAT JAHAN.

Related Posts

டெல்லியில் மருத்துவமனைக்கு வந்திருந்த பெண்கள் 3 பேர் திடீரென வளாகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்!!! Genaral News
தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நடந்தது Genaral News
விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன Genaral News
Yogi Babu welcomes his baby girl to the world! Genaral News
கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு சம்பவத்திற்கு கண்டனம்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் முத்தரசன் Genaral News
The CavvinKare-MMA ChinniKrishnan Innovation Award is Now Accepting Nominations The CavinKare-MMA ChinniKrishnan Innovation Award is Now Accepting Nominations Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme