சென்னை,
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து பிரச்சினைகளிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஆவின் பால் விலையை உயர்த்துவது குறித்து முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும். அதிமுகவில் பிரச்சினை என்று வந்தால் அனைவரும் ஒன்றாகி விடுவோம், அதிமுக குறித்து குறை கூற காங்கிரசுக்கு தகுதியில்லை. உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் முடிவு எடுப்பார்கள்.