கேஎஸ்.ரவிக்குமார், பாலகிருஷ்ணா படம் தள்ளி வைப்பு⁉
தமிழ், தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். இவர் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை தற்போது ஆட்சியைப் பிடித்திருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி போல உருவாக்கியிருந்ததாகவும், அதனால் வேறு கதையை பாலகிருஷ்ணா எழுதச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ரஜினியுடன் மீண்டும் கேஎஸ்.ரவிக்குமார் கைகோர்ப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.