இளையராஜா இசையில் பாடிய எஸ்.பி.பி
விஜய் ஆண்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் ‘தமிழரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார். இளையராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் பாடல்கள் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் ஒரு பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை பாடலாசிரியர் பழனிபாரதி எழுதியுள்ளார்.
