இந்தி மொழி திணிப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து
புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழி, ஆங்கிலத்தை அடுத்து மூன்றாவது மொழியாக இந்தி மொழி பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து ஊடகங்களில் மாறுபட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது ஒரு இந்தியனாக அவரவர் மொழியை மதிக்க வேண்டும் என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். எந்த மொழியையும் திணிக்க கூடாது என்பது என் கருத்து. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்வார்கள். குறிப்பாக தமிழர்கள் இன்னொரு மொழியை ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகம்தான்” என்று கூறியுள்ளார்.