டெல்லி
டெல்லியில் 2வது முறையாக நாட்டின் பிரதமராக ஜனாதிபதி மாளிகையில் நரேந்திர மோடி பதவி ஏற்றார். நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமானம் செய்து வைத்தார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. 2014ஆம் ஆண்டு பதவியேற்பு விழாவில் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்ட நிலையில், இந்த முறை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இதை முன்னிட்டு டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியும், வெளிநாட்டு தலைவர்களும் பதவியேற்பு விழா நடைபெறும் இடத்திற்கு வரும் வழியில் 2 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமான இடங்களில் உடனடி நடவடிக்கைகான அதிவிரைவுப் படையினரும், குறிபார்த்து சுடுவதில் தேர்ந்த வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் பல இடங்களில் மாலை 4 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் மத்திய அமைச்சராக ராஜ்நாத் சிங், அமித்ஷா, நித்ன் கட்காரி, டி.வி சதானந்த கவுடா, ரவி சங்கர் பிரசாத், சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி ராணி, நிரஞ்சன் ஜோதி, அர்ஜூன் ராம் மெக்வால், எஸ் ஜெய்சங்கர், ரமேஷ் போக்கரிய, பிரகாஷ் ஜவடேகர், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ராம் விலாஸ் பாஸ்வான், முக்தார் அப்பாஸ் நக்வி, தர்மமேந்திர பிரதான், டி.வி சதானந்த கவுடா, ஜிதேந்திர சிங் பதவி ஏற்றனர்.