சென்னை:
சென்னை – மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயிலை தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் மாறு ரயில்வே துறைக்கு டி.ஆர். பாலு கடிதம் எழுதியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்பி-யாக பதிவி ஏற்று முதற்கட்ட நடவடிக்கையாக டி.ஆர்.பாலு மேற்கொண்டுள்ளார். தாம்பரத்தில் இருந்து மதுரை செல்லும் புறநகர் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் போக்குவரத்து பாதிப்பு குறையும் என்றும் பயணிகளின் பயண நேரம் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தேஜஸ் விரைவு ரயிலை தாம்பரம் ரயில் நிலையித்தில் நின்று செல்லுமாறு எம்பி டி.ஆர். பாலு, ரயில்வே தலைவர் வினோத் குமார் யாதவுக்கு கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார். பயணிகளில் கோரிக்கையை ஏற்று இதை செயல்படுத்தும் மாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.