Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் கார்னேஷன் பட்டாசு ஆலையில்??

Posted on May 30, 2019May 30, 2019 By admin No Comments on சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் கார்னேஷன் பட்டாசு ஆலையில்??

சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் கார்னேஷன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள துலுக்கன்குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தரைச்சக்கரம், புஸ்வானம், பொட்டு வெடி, ரோல் கேப் உள்ளிட்ட சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையில் உள்ளூர் மற்றும் நார்னாபுரம், மேலப்புதூர், லெட்கமியாபுரம் உள்ளிட்ட கிராமத்தைச் சோ்ந்த சுமார் 50க்கு மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

இந்நிலையில், இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உராய்வின் காரணமாக பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் தயாரிப்பு அறை முழுவதும் தரைமட்டமானது. தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைக்கும் பணியிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் முருகேசன், சுந்தர்ராஜ் ஆகிய 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த வெடிவிபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Genaral News Tags:சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் கார்னேஷன் பட்டாசு ஆலையில்

Post navigation

Previous Post: நடிகை ஜெனிபர் லோபஸ் வயது 47 இவர் 4வது திருமணம்!!!!
Next Post: அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா ??

Related Posts

ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் டீச்சர் கர்ப்பம்.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. தானும் தற்கொலை ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் டீச்சர் கர்ப்பம்.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. தானும் தற்கொலை Genaral News
Aha Tamil & Vetri Maaran’s Jallikattu-based Magnum Opus “Pettaikaali” to stream from this Diwali Genaral News
சந்தானம் நடிக்கும் ‘எ 1’ திரைப்படத்தின் முதல் பாடல் Genaral News
வறட்சியால் காய்கறிகளின் விலைகள் உச்சத்தை தொட்டது Genaral News
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்!!! Genaral News
டெல்லியில் மருத்துவமனைக்கு வந்திருந்த பெண்கள் 3 பேர் திடீரென வளாகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்!!! Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme