புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ.வாக திமுகவைச் சேர்ந்த வெங்கடேசன் பதவி ஏற்பு
புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ.வாக திமுகவைச் சேர்ந்த வெங்கடேசன் பதவி ஏற்றார். வெங்கடேசனுக்கு துணை சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வெங்கடேசன் பதவியேற்றதை தொடர்ந்து புதுச்சேரி பேரவையில் திமுகவின் பலன் 3ஆக அதிகரித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 19.5 டிஎம்சி நீரை திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன்? வைகோ கேள்வி
சென்னை: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 19.5 டிஎம்சி நீரை திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன்? என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். தமிதுகத்துக்கான நிலுவை தண்ணீரை முழுமையாக அளிக்க ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தின் பங்கான 19.5 டிஎம்சி நீரை பெற அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
புள்ளம்பாடியில் 10 மின் மோட்டார்கள் பறிமுதல்
திருச்சி : புள்ளம்பாடி பேரூராட்சிப் பகுதியில், குழாய்களில் அனுமதியின்றி மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சிய 10 மின் மோட்டார்களை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும் கடைகளில் பயன்படுத்திய தடை செய்யப்பட்ட 27 கிலோ பிளாஸ்டிக் பைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு : கல்வித்துறை அறிவிப்பு
சென்னை : 4,001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் ‘ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது’ என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் தொடர் சிக்கல் என தேர்வர்கள் புகார்
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதில் தொடர் சிக்கல் என தேர்வர்கள் புகார் தொவிமத்துள்ளனர். மேலும் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு மே 26-ல் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உறுதிமொழி ஏற்பு
சென்னை : இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் முன் உறுதிமொழி ஏற்றனர். வி.சம்பத்குமார் ( அரூர்), நாகராஜன்(மானாமதுரை), தேன்மொழி( நிலக்கோட்டை), கோவிந்தசாமி ( பாப்பிரெட்டிப்பட்டி) சதன் பிரபாகர்( பரமக்குடி), ராஜவர்மன்( சாத்தூர்), சம்பத்( சோளிங்கர்), கந்தசாமி ( சூலூர்), சின்னப்பன்( விளாத்திகுளம்) ஆகியோர் உறுதிமொழி ஏற்கின்றனர். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகின்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
2-வது முறையாக நாளை பிரதமராக மோடி பதவி ஏற்பை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளிகையில் விழா ஏற்பாடு தீவிரம்
டெல்லி: 2-வது முறையாக நாளை பிரதமராக மோடி பதவி ஏற்பை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளிகையில் விழா ஏற்பாடு தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் உலக நாட்டுத் தலைவர்கள் வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளும், முக்கிய பிரமுகர்களும் திரை பிரபலங்களும் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
கோவை ஒப்பணக்கார வீதியில் 5 மாடிகள் கொண்ட சரவணா செல்வரத்தினம் கடைக்கு சீல்
கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில் 5 மாடிகள் கொண்ட சரவணா செல்வரத்தினம் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. பார்க்கிங் இடத்தை குடோனாக பயன்படுத்தி, திறந்தவெளி பகுதி இல்லாமல் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வணிகத்திற்கு முன் உள்ள பொது இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மோடி பதவியேற்பு விழா: கமலுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார்?…பாஜக செய்தித் தொடர்பாளர் கேள்வி
சென்னை: மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்ய தலைவர் கமலுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார்? என பாஜக செய்தித் தொடர்பாளர் தி.நாராயணன் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். நாளை இரவு 7 மணிக்கு பிரமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியான நிலையில், பொய் செய்திகளை சொல்லி கொண்டிருந்தவர்கள், பொய்யையே செய்தியாக சொல்கிறார்களே? என தி.நாராயணன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பைக் ரேஸ் நடைபெறும் நிலையில், மெரினா கடற்கரையில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் பைக்குகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மோடியுடன் இணைந்து செயல்படுவோம்: அமெரிக்கா…
வாஷங்டன்: இந்தியா , எங்களின் சிறந்த நட்பு நாடு. பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவோம் என அமெரிக்கா கூறியுள்ளது.
வாத்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
புதுடில்லி: கூர்கான், பிகாநீரில் நிலம் வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பான விசாரணைக்கு நாளை(மே 29) ஆஜராகும்படி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். லண்டனில் சட்டவிரோதமாக வீடு வாங்கியது குறித்தும் அவரிடம் விசாரணை நடக்க உள்ளது. நாளை(மே 29) காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வாத்ராவிற்கு சம்மன் அனுப்பப்படுவது இது 9வது முறையாகும்.
பிரதமர் மோடியை புகழ்ந்த காங்., தலைவர்
திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தலில், மஹாத்மா காந்தி கொள்கையை பிரதமர் மோடி கடைபிடித்ததால் அவருக்கு வெற்றி கிடைத்ததாக, மாநில காங்., தலைவர் ஏபி அப்துல்லாகுட்டி புகழ்ந்துள்ளார். இது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ தளத்தை வீடியோ பதிவு செய்த 2 பேர் கைது
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரத்னுசக் ராணுவ தளத்தில் மர்ம நபர்கள் 2 பேர் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த ராணுவ அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள், ராணுவ தள விவரங்கள், வீடியோ காட்சிகளை பாகிஸ்தானிற்கு அனுப்பியது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடக்கிறது
மருத்துவர் பாயல் தற்கொலை வழக்கு: மேலும் 2 மருத்துவர்கள் கைது
மும்பை ;- பெண் மருத்துவர் பாயல் தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 மருத்துவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணுவ தளத்தை வீடியோ பதிவு செய்த 2 பேர் கைது
ஜம்மு, ;- ராணுவ தளத்தை வீடியோ பதிவு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் உளவாளிகளா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்
மிசோரம் மாநிலத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மோடி பதவியேற்பு விழாவுக்கு இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்காததற்கு உள்நாட்டு அரசியலே காரணம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆந்திர முதல்வராக நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில் இன்று காலை ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
அரசு துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதிக்க சட்டசபை ஜூன் மூன்றாம் வாரத்தில் கூட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமமுகவின் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை- தங்க தமிழ்ச்செல்வன்
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இது குறித்து தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம், பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. இதை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும். வருங்காலத்தில் தோல்வி ஏற்படாதவாறு கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.
இதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் 1-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்போம்.
எங்களின் பிரசாரங்களை மக்கள் ரசிக்கவில்லை என்பது இந்த தேர்தலில் தெரிகிறது. என்னை பார்க்கும் பொதுமக்கள் ‘உங்களுக்குத்தான் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன் என்று கூறுகிறார்கள். கிராமங்களில் என்னை மக்கள் அ.தி.மு.க. கட்சிக்காரராகவே பார்க்கிறார்கள். இரட்டை சிலை சின்னம் மக்கள் மனதில் பதிந்துவிட்ட சின்னமாகவே உள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தோல்வியை வைத்து எதிர்காலத்தை முடிவு செய்து விட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்களை அ.தி.மு.க.வுக்கு இழுக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வருகிறதே? என்று கேட்டதற்கு தங்க தமிழ்ச்செல்வனுக்கு கிராக்கி இல்லாமல் இருக்குமா? என்று எதிர்கேள்வி எழுப்பினார்.
அரசியல் பாதை என்பது நிதானமாக இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.
அ.தி.மு.க.வில் பதவி கிடைத்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உடைக்க நீங்கள் தயாராக இருப்பதாக செய்திகள் வருவது குறித்து கேட்டதற்கு அது உண்மையல்ல. எனது அரசியல் பாதை தெளிவாக உள்ளது. அதன்படி செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கணவர் தப்பி சென்ற ஆத்திரத்தில் அவரது மனைவியை போலீசார் நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுவை :
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்கிறார். இன்று பெங்களூரு செல்லும் நாராயணசாமி, அங்கிருந்து டெல்லி சென்று நாளை நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளார்.
ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்பு
புவனேஸ்வர் :
ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக 5-வது முறையாக நவீன் பட்நாயக் பதவியேற்றுக் கொண்டார். ஒடிசா மாநில சட்டமன்றக் தேர்தலில் 112 தொகுதிகளில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதளம் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்றார்.
குன்னூா் – மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மரம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு
குன்னூா்:
குன்னூா் – மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
திருப்போரூர்:
திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பார் உரிமையாளர் நெல்லையப்பன் போலீஸ் மீது குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன் மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்புராஜ் தன்னை கட்டாயப்படுத்தி லஞ்சம் வாங்குவதாக நெல்லையப்பன் புகார் அளித்துள்ளார்.