மோடி பதவியேற்புக்கு குவியும் 6000 விஐபிகள்.. நேற்றே சமையல் ஆரம்பம்.. அசத்தல் மெனு இதுதான்
டெல்லி:
பிரதமராக மீண்டும் மோடி நாளை பதவியேற்க உள்ள விழாவில், என்ன மாதிரியான விருந்து உபசாரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் நாளை பதவியேற்கவுள்ளார்.
நாளை இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்!
பலத்த கூட்டம்
6 ஆயிரம் பேர்
இந்த விழாவில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் விஐபிகள் வரை பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளது. பாஜகவின் மிகப்பெரிய வெற்றியை கொண்டாடுவதற்காக அந்த கட்சிக்கு நெருக்கமான முக்கியஸ்தர்கள் பலரும் பதவியேற்பு விழாவில், கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த நிகழ்ச்சியை எளிமையாக நடத்தும்படி பிரதமர் அலுவலகம் சார்பில், குடியரசு தலைவர் மாளிகையை கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிக விஐபிகள்
கூட்டம் அதிகம்
பிரதமர் பதவி ஏற்கும் விழா என்பது ராஷ்டிரபதி பவனில் முக்கியமான கேட்கள் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நடுவேயுள்ள பாதையில் வைத்து நடைபெற உள்ளது. பொதுவாக, இங்கே, பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் வரும்போது, அணிவகுப்பு மரியாதை வழங்கப்படுவது வழக்கம். பெரும்பாலும், தர்பார் ஹால் என்ற இடத்தில் வைத்து தான் பிரதமர்கள் பொறுப்பேற்பார்கள். ஆனால் கூட்டம் அதிகம் வரும் என்பதால் பதவியேற்பு விழா நடத்துவதற்கு இந்த இடத்தை பிரதமர் அலுவலகம் தேர்வு செய்துள்ளது.
மோடி இரண்டாவது முறை
4வது பிரதமர்
குடியரசு தலைவர் மாளிகை பாதை, இடத்தில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்தக்கூடிய நான்காவது பிரதமர் மோடி ஆகும். முதலில், சந்திரசேகர் 1990இல் பிரதமராக பதவி ஏற்கும் போது இந்த இடத்தில்தான் விழா நடைபெற்றது. 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் இதே இடத்தில் வைத்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். 2014ஆம் ஆண்டு முதல் முறையாக மோடி பிரதமர் ஆன போதும் இங்கு தான் பதவி ஏற்பு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போவே
ஆரம்பித்த சமையல்
மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்கு வரக்கூடிய வெளிநாட்டு தலைவர்கள் பலரும் கிழக்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள். அவர்களுடைய உணவுப் பழக்கம், ஆடம்பரமானதாக இருக்காது. அதே போன்று குவியல் குவியலாக அதிகப்படியான உணவு பதார்த்தங்களையும் அவர்கள் சேர்த்துக் கொள்வது கிடையாது என்பதை குடியரசுத் தலைவர் மாளிகை சமையல் கலைஞர்கள் மனதில் கொண்டுள்ளனர். இருப்பினும் விருந்தினர்களை சிறப்பாக உபசரிப்பதற்காக ‘டால் ரைசினா’ என்ற உணவு பதார்த்தம் ஸ்பெஷலாக சமைக்கப்படுகிறது. இதற்கு மொத்தம் 48 மணி நேரம் தேவைப்படும். எனவே செவ்வாய்க்கிழமை இரவு முதலே சமையல் வேலை தொடங்கிவிட்டது. சைவ உணவுகள் மட்டுமின்றி அசைவ உணவுகளும் தயார் படுத்தப் படுகின்றன. ராஜ்போக், வெஜ் தாலி, போன்றவை இதன் முக்கிய அம்சங்கள்.