திருவனந்தபுரம்,
17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் அரியணையில் அமருகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கிறார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரை தொடர்ந்து பல்வேறு மந்திரிகளும் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பங்கேற்க போவதில்லை என அம்மாநில முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. மம்தா பானர்ஜியை தொடர்ந்து பினராயி விஜயனும் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.