Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தேர்வான சிறப்புப்பிரிவினரின் இறுதிப்பட்டியல் மே 31 ம் தேதி வெளியிடப்படும் என்று மெட்ரிக்??

Posted on May 29, 2019May 29, 2019 By admin No Comments on தேர்வான சிறப்புப்பிரிவினரின் இறுதிப்பட்டியல் மே 31 ம் தேதி வெளியிடப்படும் என்று மெட்ரிக்??

சென்னை:
கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் தேர்வான சிறப்புப்பிரிவினரின் இறுதிப்பட்டியல் மே 31 ம் தேதி வெளியிடப்படும் என்று மெட்ரிக். பள்ளி இயக்குநரகம் அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களில், சமூகத்தில் நலிந்த பிரிவு, ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த மாநில அரசுகளே கல்விச் செலவை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்காக தமிழக அரசு ரூ.218 கோடி நிதியை பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது. இந்த நிதி, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு கடந்த வாரம் முதல் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்காக தமிழக அரசு ரூ.218 கோடி நிதியை பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது. இந்த நிதி, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு கடந்த வாரம் முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், ஏழை எளிய, நலிந்த பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் குழந்தைகளை சேர்ப்பதற்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியானது.

இதனை தொடர்ந்து 97 ஆயிரம் பேர் தங்கள் குழந்தைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டில் இடம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வான சிறப்புப்பிரிவினரின் இறுதிப்பட்டியல் மே 31 ம் தேதி வெளியிடப்படும் என்று மெட்ரிக். பள்ளி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவல்கள் பட்டியலை வெளியிடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைவான விண்ணப்பங்களைப் பெற்ற 3000 பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின்பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. அதிக விண்ணப்பங்களைப் பெற்ற பள்ளிகளில் ஜுன் 6-ம் தேதி குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

Genaral News

Post navigation

Previous Post: தமிழகதில் தண்ணீர் பஞ்சம் காரணமாக ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்க கடும் எதிர்ப்பு??
Next Post: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி, மே 31-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது

Related Posts

வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும் வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா? : ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும் Genaral News
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை சாகச நகைச்சுவை திரைப்படமான “பெடியா” டிரைலர் வெளியீடு Genaral News
The Indian Express Bigg Boss Tamil பிக் பாஸ் 4’ எப்போது தொடங்கும்? – எண்டிமால் நிறுவனத்தின் அறிவிப்பு இதோ Genaral News
தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நடந்தது Genaral News
லியாண்டர் பயஸ் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது Genaral News
சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவம் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme