சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். .
அமராவதி புதூர் கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில், 90 காளைகள் பங்கேற்றன. சீறிபாய்ந்து சென்ற காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். .
ஜல்லிக்கட்டு போட்டியைக் காண, சுற்றுவட்டார கிராம மக்கள் குவிந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. .
முன்னதாக, சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே மேலக்கோட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி அழகமாநகரி கிராமத்தை சேர்ந்த பாலகுரு என்கிற இளைஞர் உயிரிழந்தார்.