சோனி லிவ் தனது டிஜிடல் தடத்தைத் தென் இந்தியாவில் விரிவுபடுத்தியது;
தமிழ் டிஜிடல் நிகழ்ச்சி பிரிவில் முன்னணி வகிக்கத் திட்டம்
~ 2000 மணி நேர தரமான தமிழ் நிகழ்ச்சிகள் ~
ஐவர் – முதல் தமிழ் ஒரிஜினல் நிகழ்ச்சி தொடக்கம்
சென்னை: 2019 மே 28 : இந்தியாவின் முதல் பிரிமியம் வீடியோ ஆன் டிமாண்ட் (VOD)
தளமான சோனி லிவ் தனது நேயர்களுக்கு உள்ளூர் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கத்
தமிழில் சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,
பிசினஸ் ஹெட் – டிஜிடல், உதய் சோதி உடனிருக்கத், தமிழகத்தின் பிரபல முகங்களான
கௌதம் வாசுதேவ் மேனன், பாலாஜி மோகன் மற்றும் சிங்கீதம் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் இந்த
தளத்துடனான தங்களுடைய செயல்பாட்டை அறிவித்தனர். வரும் ஜூன் முதல் ஏராளமான
தமிழ் நிகழ்ச்சிகள் சோனி லைவ்-இல் ஒளிபரப்பாக உள்ளன.
சோனி லைவ்-இல் ‘ஐவர்’ நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பாக இருப்பது குறித்த முக்கிய அறிவிப்பு
வெளியிடப்பட்டது. ஹர்ஷா இயக்கத்தில், அஸ்வின் காகாமனு மற்றும் சஞ்சனா கல்ரானி
ஆகியோர் நடிப்பில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி தாத்தாவின் பத்திரிக்கையை ஒரு வர்த்தகர்
மீட்டெடுக்கும் போராட்டம் பற்றியதாகும். சோனி லைவ்-இல் ஏற்கனவே 85 ஒரிஜினல்கள்
உள்ள நிலையில் ‘ஐவர்’ ஜூனில் ஒளிபரப்பாகும்.
சோனி லைவ்-இல் ஒளிபரப்பாகவிருக்கும் ‘தி ஃபார்ம்’ மற்றும் ‘மை மரபு’ முழுக்க முழுக்க
அமெரிக்காவில் படமாக்கப்பட்டவை. சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்கின் டாப் 20 நிகழ்ச்சிகள்,
திரைப்படங்கள், பிட்சர்ஸ், டிரிப்ளிங்க் மற்றும் பெர்மனெண்ட் ரூம் மேட்ஸ் உள்ளிட்ட
டிவிஎஃப் ஒரிஜினல்களும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் தமிழில் வரவிருக்கின்றன.
நெட்வொர்க்கின் பிரபல ஐபி-யையும் சோனி லிவ் தமிழில் மறு ஆக்கம் செய்ய உள்ளது.
நீண்ட காலம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுள் ஒன்றான க்ரைம் பேட்ரோல்,
உள்ளூர் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களைக் கொண்டு டிஜிடல் முறையில் மறு ஆக்கம்
செய்யப்படும்.
சோனி லிவ் நூலகத்தில் தெற்குச் சந்தைகளுக்காக தி குட் டாக்டர், கவுண்டர்பார்ட்,
விக்டோரியா, தி ஹாண்ட்மெயிட்ஸ் டேல் உள்ளிட்ட பிரபல மற்றும் விருது பெற்ற ஆங்கில
நிகழ்ச்சிகள் குவிக்கப்பட்டு இருக்கின்றன. கால்பந்தாட்டப் பிரியர்கள் தங்களுக்குப்
பிடித்தமான விளையாட்டை இனி தமிழ் வர்ணனையுடன் கண்டு மகிழலாம்.
7 நாள்களுக்கான 29 சாஷே பேக் பிரிமியம் சந்தா மாதம் ரூ 99/- மற்றும் ஆண்டு சந்தா
ரூ 499/-இல் தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம். தற்போது சோனி லிவ் நூலகத்தில்
இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் சமீபமாக நேற்று அறிவித்த தெலுங்கு மொழி சேவைகள்
கிடைக்கும்.
இது குறித்து சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா, டிஜிடல் பிசினஸ் ஹெட் உதய் சோதி
கூறுகையில் ‘முன்னிலை நிறுவனம் என்னும் நிலையில் சோனி லிவ் தனது நுகர்வோருக்குப்
பொழுதுபோக்கு அனுபவத்தை உள்ளூர் மொழியில் வழங்க வேண்டிய அவசியத்தை
உணர்ந்து எல்லைகளையும், நிகழ்ச்சிகளையும், விரிவுபடுத்தியது. தமிழில் எங்கள்
சேவைகளை வழங்குவதிலும், டிஜிடல் இகோசிஸ்டத்தில் எங்கள் பிராண்டை
வலுப்படுத்துவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். தடையற்ற ஸ்ட்ரீமிங்க் அனுபவத்துடன்
உள்ளூர் நடிகர்கள் நடிப்பில் கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவோம்’ என்றார்
நம்பிக்கையுடன்.
சோனி லைவ்
அனைத்துக் கருவிகளிலும் பயனீட்டாளர்களுக் மல்டி ஸ்க்ரீன் வசதியை வழங்கும் சோனி பிக்சர்ஸ்
நெட்வொர்க் (எஸ்பிஎன்) நிறுவனத்தின் முதல் பிரிமியம் வீடியோ ஆன் டிமாண்ட் சோனி லிவ் ஆகும். 2013
ஜனவரியில் அறிமுகமானதைத் தொடர்ந்து அதில் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவின் 23 ஆண்டு
கால நெட்வொர்க் சேனல்களின் உயரிய நிகழ்ச்சிகள பயனீட்டாளர்கள் கண்டு ரசிக்கலாம். திரைப்படங்கள்,
விளையாட்டுகள், இசை, உணவு, ஃபிட்நெஸ் எனப் பல்வகை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
இதுவரை 109 மில்லியன் செயலிகள் பதிவிறக்கங்களுடன், சோனி லிவ் தனது போட்டி நிறுவனங்களிடையே
ஒரிஜினல் பிரத்யேக பிரிமியம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் முன்னிலை வகிக்கிறது. ஆன்லைன்
தளத்துக்காக இந்தியாவின் முதல் பிரத்யேக ஒரிஜினல் காட்சியை சோனி லிவ் அறிமுகப்படுத்தியது. 2018
எஃப்ஐஎஃப்ஏ ரஷிய உலகக் கோப்பைப் போட்டிகளை சோனி லைவ்-இல் ஒளிபரப்பிய போது கால்பந்தாட்ட
ரசிகர்களுக்கு இடையே அதுவே அதிகம் விரும்ப்பட்டதாக விளங்கியது. 2018இல் தென் ஆப்பிரிக்கா,
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்தியக் குழு விளையாடிய போது அவற்றை லிவ் ஸ்ட்ரீமிங்காக
சோனி லிவ் ஒளிபரப்பியது. யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக், யுஇஎஃப்ஏ ஐரோப்பா லீக், லா லிகா உள்ளிட்ட
பல பெரிய கால்பந்து லீக்களுக்கு இதுவே சொந்த ஒளிபரப்பு தளமாகும்.
ட்ரிப்ளிங்க் சீசன் 1 மற்றும் 2 உள்ளிட்ட டிவிஎஃப் நிகழ்ச்சிகளும் சோனி லைவ்-இல் உண்டு. அமெரிக்க
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் முன்னிலை வகிக்கும் லயன்ஸ்கேட் பிளே பிரபல ஷோக்களும், தி குட்
டாக்டர், மிஸ்டர் மெர்சிடிஸ், டேமேஜஸ், கவுண்டர்பார்ட் மற்றும் ஹேண்ட்மெயிட்ஸ் டேல் ஆகிய ஆங்கில
விருது பெற்ற நிகழ்ச்சிகளும் சோனி லைவ்-இல் இதில் அங்கம் பெறும். மேலும் விவரங்களுக்கு
www.sonyliv.com
சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (எஸ்பிஎன்)
சோனி எண்டர்டெயின்மெண்ட் நெட்வொர்க் ஆஃப் டெலிவிஷன் சேனல்களின் உரிமையாளரான சோனி
கார்பொரேஷன் துணை நிறுவனம் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (எஸ்பிஎன்) ஆகும்.
சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவிடம் (எஸ்பிஎன்) பல்வேறு சேனல்கள் உள்ளன. சோனி
எண்டர்டெயின்மெண்ட் டெலிவிஷன் (செட் & செட் ஹெச்டி) – இந்தியாவின் முன்னணி இந்திப்
பொழுதுபோக்குத் தொலைக்காட்சிச் சேனல்கள்; மேக்ஸ் – இந்தியாவின் பிரிமியம் இந்தித் திரைப்படங்கள் &
ஸ்பெஷன் ஈவெண்ட்ஸ் சேனல்; மேக்ஸ் 2 – மற்றுமொரு பிரம்மாண்ட இந்தித் திரைப்படங்கள் சேனல்;
மேக்ஸ் ஹெச்டி – ஹை டெஃபனிஷன் பிரிமியம் தரமான இந்தித் திரைப்படங்கள் சேனல்; வாஹ் – இந்தித்
திரைப்படங்களுக்கான எஃப்டிஏ சேனல்; ஸாப் & ஸாப் ஹெச்டி – குடும்ப நகைச்சுவைப் இந்தி
பொழுதுபோக்குச் சேனல்கள்; பால் – இந்தி கிராமப்புற சந்தைகளுக்கு (ஹெச்எஸ்எம்); பிக்ஸ் & பிக்ஸ்
ஹெச்டி – ஆங்கிலத் திரைப்படச் சேனல்கள்; ஏஎக்ஸ்என் & ஏஎக்ஸ்என் ஹெச்டி –ரியாலிடி, பொழுதுபோக்கு
& நாடகம்; சோனி பிபிசி எர்த் & சோனி பிபிசி எர்த் ஹெச்டி – பிரிமியம் ஃபேக்சுவல் பொழுதுபோக்குச்
சேனல்கள், சோனி ஏஏடிஹெச் – பங்களா பொழுதுபோக்குச் சேனல்; மிக்ஸ் – இந்தி இசைச் சேனல்; யாய் –
குழந்தைகளுக்கான பொழுதுபோக்குச் சேனல்; சோனி சிக்ஸ், சோனி சிக்ஸ் ஹெச்டி, சோனி இஎஸ்பிஎன்,
சோனி இஎஸ்பிஎன் ஹெச்டி, சோனி டென் 1, சோனி டென் 1 ஹெச்டி, சோனி டென் 2, சோனி டென் 2
ஹெச்டி, சோனி டென் 3, சோனி டென் 3 ஹெச்டி – சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்கள்; சோனி மராட்டி –
சோனி மராட்டி பொழுதுபோக்கு சேனல்; சோனி லிவ் – டிஜிடல் பொழுதுபோக்கு விஓடி தளம்; எஸ்பிஎன்
புரொடக்ஷன்ஸ் – திரைப்படத் தயாரிப்புப் பிரிவு; ஸ்டூடியோ நெக்ஸ்ட் – ஒரிஜினல் நிகழ்ச்சி மற்றும்
தொலைக்காட்சி & டிஜிடல் மீடியாவுக்கான ஐபி தயாரிப்பு முனைவு. இந்தியாவில் 700 மில்லியன்
பார்வையாளர்கள் மற்றும் உலகின் 167 நாடுகளை எஸ்பிஎன் சென்றடைகிறது.
ஊடகத் துறைக்கு வெளியே இந்த வலையமைவு உள்ளும் புறமும் எம்ப்ளாயர் அஃப் சாய்ஸ் அதாவது
ஊழியர் பணியாற்ற விரும்பும் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஎன் வித்தியாசமான பணியிடக்
கலாச்சாரம் மற்றும் நடைமுறைகள் காரணமாக அங்கீகரிக்கப்பட்டு ‘ஏயான் பெஸ்ட் எம்ப்ளாயர்ஸ் இந்தியா’,
எஸ்ஹெச்ஆர்எம் & சிஜிபி பார்ட்னர்ஸ் அங்கீகரிப்பில் சிறந்த சுகாதார & நலம் நடைமுறைப்படுத்தும்
இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களுள் ஒன்று, வொர்க்கிங்க் மதர் & அவ்தார் அங்கீகரிப்பில் இந்தியாவில்
பெண்களுக்கான சிறந்த டாப் 100 நிறுவனங்களுள் ஒன்று, கிரேட் பிளேஸ் டு வொர்க் இன்ஸ்டிட்யூட்டால்
இந்தியாவின் சிறந்த பணியிட நிறுவனங்களுள் ஒன்றாகத் தேர்வு செய்யபப்ட்டுள்ளது.
சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 24ஆவது ஆண்டாகச் சிறப்பாகச்
செயல்பட்டு வருகிறது. எம்எஸ்எம் – வேர்ல்ட் வைட் ஃபேக்சுவல் மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும்
துணை நிறுவனமும், இந்தியாவில் ‘பங்க்ளா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்’ என்னும் இணை
நிறுவனமும் இந்தியாவில் இதற்குண்டு.