பிக்பாஸ் ஐஸ்வர்யா தான் காதலில் விழுந்துவிட்டதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இரண்டாவது பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துகொண்டப்பின் மிகவும் பிரபமாககிவிட்டார் ஐஸ்வர்யா தத்தா. இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அவரின் நடவடிக்கை பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தி வந்தாலும், நிகழ்சி முடிந்தது அவரின் ரசிகர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்றே கூறலாம்.
இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு படங்களில் ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகின்றார். தற்போது கெட்டவனு பேர் எடுத்த நல்லவண்டா, அலேகா, கன்னித்தீவு ஆகிய படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா சமூக வளையத்தளங்களில் ரசிகர்களுக்கு அவ்வதுபோது பதிலளித்தும் வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா தத்தா தனது டிவிட்டர் பக்கதத்தில் தான் காதலில் விழுந்துவிட்டதாக ஒரு செய்தியை மறைமுகமாக, காதல் ஹாட்டினுடன் பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் ஐஸ்வர்யா யாரை காதலிக்கின்றார்? எப்போது இருந்து காதலிக்கின்றார். ஆகிய விபரங்களை அவர் பதிவிடாததால், ரசிகர், அவரின் காதலர் யார்? யார்? என்று கேட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு இதுவரை அவர் பதிலளிக்கவில்லை. காதலை சொன்ன ஐஸ்வர்யா விரைவில் தன்னுடைய காதலரை அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.