ராயல்ட்டி பிரச்சனை தொடர்ந்த இல்லயராஜா-எஸ்.பி.பாலசுப்ரமணியம் சந்திப்பு‼
ராயல்ட்டி பிரச்சனை காரணமாக எஸ்.பி.பி தனது பாடல்களை கச்சேரி மேடைகளில் இனி பாட கூடாது என வக்கீல் நோட்டீஸை கடந்த ஆண்டு இளையராஜா அனுப்பி இருந்தார். இதனால் இருவரது நட்பில் சிறிது இடைவெளி விழுந்தது.
ஆனால் நட்பில் இதெல்லாம் சகஜம் தான் என்பது போல ஜூன் 2 ம் தேதி இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் இசை செலிப்ரேட்ஸ் இசை என்ற இளையராஜாவின் கச்சேரிக்காக சமீபத்தில் இருவரும் சந்தித்துள்ளனர்.