பொள்ளாச்சி-அப்பாவி பெண்ணை 5 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் நிரூபணம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்.
கோவை:
பொள்ளாச்சியில் ஃபேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களிடம் காதல் வார்த்தை பேசி தனிமையான இடங்களுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த கொடூரர்கள் ஐவரும் அதை வீடியோ எடுத்து பணம் பறிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்று சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பெண்கள் பலாத்கார வழக்கை விசாரணை நடத்திய சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிக்கையை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
பொள்ளாச்சியில் உள்ள ரிசார்ட்களில் பெண்களை வரவழைத்து பலாத்காரம் செய்து அதை வீடியோவும் எடுத்து மிரட்டியுள்ளனர் இந்த கயவர்கள். இவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வீடியோ எடுத்து மிரட்டல்பொள்ளாச்சியில் இளம்பெண்களை பலாத்காரம் செய்து அதை ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தியதோடு அவர்களை மிரட்டி பணம்,நகை என்று பறித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது அண்ணனும் போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.குற்றவாளிகளுக்கு தண்டனைதிருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய ஐவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்தால் உண்மை வெளியே வராது என்றும் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.சிபிஐ குற்றப்பத்திரிக்கைகடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பொள்ளாச்சி போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்திய இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்ட நிலையில் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி.சிபிஐ விறுவிறு விசாரணைசபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல், தனிநபர் உரிமையில் தலையிடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பரிவு செய்து விசாரணை நடத்தியது. இதே போல செந்தில், பாபு, மணி மற்றும் வசந்தகுமார் ஆகியோர் மீது நடத்தை கோளாறு, மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துதல், தவறான உள்நோக்கம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது.குற்றம் நிரூபணம்கடந்த 2 மாதகாலமாக பலாத்கார வழக்கை விசாரணை நடத்திய சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிக்கையை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
குற்றச்சாட்டுகள் நிரூபணம்ஃபேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களிடம் காதல் வார்த்தை பேசி தனிமையான இடங்களுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த கொடூரர்கள் ஐவரும் அதை வீடியோ எடுத்து பணம் பறிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஐந்து பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகமின்றி நிரூபணமாகியுள்ளது.பெண்கள் பலாத்காரம்5 பேரும் மனச்சாட்சி இன்றி இளம் பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர். ஆசை வார்த்தை கூறி தனியிடங்களுக்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்தனர் என்று கூறப்பட்ட நிலையில், பெண்களின் சம்மதமின்றி அப்பாவி பெண்களை பலாத்காரம் செய்துள்ளது சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் ஐந்து பேருக்கும், அதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் நீதிபதியின் தண்டனை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.