தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தலுடன் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், அரவக்குறிச்சி, ஆண்டிப்பட்டி, குடியாத்தம், ஆம்பூர், ஓசூர், திருவாரூர், தஞ்சாவூர், பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 13 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தி.மு.க. – எம்.எல்.ஏ.க்கள் நாளை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் அறையில் பதவி ஏற்கவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அதேநேரம் அ.தி.மு.க.வின் 9 புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை மறுநாள் 29ம் தேதி பதவி ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.