Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இன்று ஒரு மாணவர் தற்கொலை பெரும் அதிர்ச்சியை

Posted on May 27, 2019 By admin No Comments on எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இன்று ஒரு மாணவர் தற்கொலை பெரும் அதிர்ச்சியை

சென்னை,

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திருவள்ளூர் மாவட்டம் பென்னேரியை சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி 9-வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார். இவர் மருத்துவ துறையில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக மனஅழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது மாணவியின் உடலை உறவினர்கள் இன்று வாங்கி சென்ற நிலையில் அனிரூத் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனிரூத் என்ற மாணவர், ஈ.சி.ஈ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அவர் இன்று காலை, 2ஆவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அனிரூத் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது கல்லூரியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Genaral News

Post navigation

Previous Post: தே.மு.தி.க.வின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது
Next Post: சென்னையில் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக!!!

Related Posts

அயோக்யா படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகர் பார்த்திபன்!!! Genaral News
Tavji Character English Instagram UC Tavji Character English Instagram UC Genaral News
Aavaranaa’s MAGICAL DRAPES a workshop on the art of Styling & Draping sarees for festive Occasions by Ashwini Narayan. Genaral News
ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கும் ராகுல் காந்தி-மீண்டும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் Genaral News
A fully integrated Donation-as-a-Service platform – Trusted Donations launched Education News
மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரசன்னா Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme