திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நேற்று மாலை சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத்திலிருந்து திருப்பதிக்கு குடும்பத்தாருடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வருகை தந்தார் அங்கிருந்து திருமலைக்கு வந்த தெலங்கானா முதல்வரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கவைத்தனர் இன்று காலை கோவிலில் முன் கோபுரம் வழியாக வேத மந்திரங்கள் முழங்க கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர் சுவாமி தரிசனத்திற்குப் பின் ரங்கநாயகி மண்டபத்தில் ஆசீர்வாத வேத மந்திரங்கள் முள்ளங்கி தீர்த்த பிரசாதங்களை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.
தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில், சந்திரசேகர்ராவ் திருப்பதி சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.
மேலும் கே.சி.ஆரின் மகள் கவிதா போட்டியிட்ட நிசாம்பாத்தில், அவர் தோல்வியை தழுவிய நிலையில் அங்கு பாஜக வேட்பாளர் அரவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இந்தநிலையில் கவிதா இன்று திருப்பதி வந்து இருந்தார்.