மு.க.ஸ்டாலின், நடிகர் உதயநிதியை சந்தித்தார் நடிகர் விஷால்.
நடைபெற்று முடிந்த 17வது மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜக அலை சுனாமி போல் அடித்தபோதிலும் அதன் ஒரு சிறிய தாக்கம் கூட தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியின் வெற்றிக்காக கடந்த சில மாதங்களாக கடுமையான உழைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய, மாநில தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விஷால். மேலும் அவர் திமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.