பிக்பாஸ் 3 படப்பிடிப்பு தொடக்கம்; ஜூலை நிகழ்ச்சி தொடங்குகிறது
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் கடந்த 2017 ஆண்டு தொடங்கியது. முதல் நிகழ்ச்சி எதிர்ப்பார்த்தை விட அதிக ரசிகர்கள் கிடைத்த நிலையில் முதல் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்து டைட்டில் வின்னராக நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். இந்த நிலையில் பிக்பாஸ் 2 கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்றது, முதல் சீசனைப் போன்று இந்த சீசன் 100 நாட்களுக்குப் பதிலாக அதற்கு 110 நாட்கள் வரை நடைபெற்றது. 2-வது சீசனில் நடிகை ரித்விக்கா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் 2019ம் ஆண்டு பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. இதற்காக புரோமோ தயாரிப்பில் விஜய் டிவி ஈடுபட்டுள்ளது. விரைவில் பிக்பாஸ் 3-ல் பங்கேற்கும் பிரபலங்களும் அறிவிக்கப்பட உள்ளனர்.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்களுக்கான தேர்வை தற்போது விஜய் டிவி நடத்தி வருகிறது. இதில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு நேர்கணலுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற அதே ஷெட்டில் பிக்பாஸ் சீசன் 3 துவங்க உள்ளது. இன்று அதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு புரமொஷன் வீடியோக்களை படப்பிடிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் நிகழ்ச்சிக் குழுவினர். இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம் என தெரிய வருகிறது. ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஏற்கனவே இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் இந்த 3-வது சீசனை தொகுத்து வழங்குகின்றார்.