நடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் ⁉
நடிகர் சிம்புவின் சகோதரர் குறளரசனுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விரைவில் சிம்புவுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும், அவருக்கான சரியான பெண்ணை தாங்கள் பார்த்து கொண்டிருப்பதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிம்புவின் தாயார் உஷா பார்த்த பெண்ணை சிம்பு திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.